Thursday, August 11, 2011

அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு

பாம்புகளில் எத்தனையோ வகைகள் உண்டு.அதில் வெள்ளை நிற நாகபாம்பு மிகவும் அபூர்வமானதாகும்.இலங்கையில் ஐந்து அடி நீளம் கொண்ட அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு ஒன்று ஒருவரின் வீட்டின் கோழிக் கூட்டில் பிடிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, வியாபாரிமூலை, இராவாலை பகுதியில் சி.இராதாகிருஸ்ணன் என்பவரின் வீட்டிலுள்ள கோழிக்கூட்டில் இந்த வெள்ளைநிற நாகம் பிடிபட்டது.தற்போது இந்தப் பாம்பைப் பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடிய வண்ணம் உள்ளனர்.இது தொடர்பாக வவுனியா வனவிலங்குப் பிரிவுக்கு வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  இதன் புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்








1 comment:

M.R said...

இன்று தான் வெள்ளை நிற பாம்பை பார்க்கிறேன் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி நண்பரே .

எனது தளம்

http://thulithuliyaai.blogspot.com

ஓய்வாக இருந்தால் வந்து பார்த்து

உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பரே
நன்றி