Tuesday, August 23, 2011

நெட்டில் டௌன்லோட் செய்பவரா நீங்கள்?முதலில் இதைப் படியுங்கள்



 ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே, அந்தபடம் திருட்டு வி.சி.டி.,யாகவும், ஆன்லைனிலும் ஒளிப்பரப்பாகி விடுகிறது. இதனை தடுக்க திரைத்துறையினரும், அரசும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுத்தியுள்ளது, பி.வாசு இயக்கத்தில், ஆர்.கே., நடித்து, விரைவில் வெளிவர இருக்கும் புலிவேஷம் படக்குழு.







படத்தில் ரூ.10லட்சம் செலவில் டிஜிட்டல் பாதுகாப்பு செய்துள்ளார் நடிகர் ஆர்.கே., இதன்படி படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்காவது ஆன்லைனில் இந்தபடத்தை டவுன்லோடு செய்தாலோ அல்லது அப்படியே திரையில் பார்த்தாலோ, அடுத்த 15நிமிடங்களில் புலிவேஷம் திருட்டு வி.சி.டி., கண்காணிப்பு குழுவுக்கு தெரிந்துவிடும். இந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது. மேலும் ஆன்லைன் தவிர்த்து, திருட்டு டி.வி.டியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.






இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்.கே., கூறுகையில், ஆன்லைன் மூலம் திருட்டுதனமாக படம்பார்ப்பவர்களும், அதன்மூலம் திருட்டு டி.வி.டி., தயாரிப்பதை கண்டுபிடிக்கவும் புதிய தொழில்நுட்பத்தை, புலிவேஷம் படத்தில் புகுத்தியுள்ளனர். இதன்மூலம் எங்காவது இப்படத்தை டவுன்லோடு செய்தாலோ, பார்த்தாலோ உடன் எங்களுக்கு தெரிந்துவிடும். உடனே சம்மந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்ததொழில் நுட்பத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை. புலிவேசம் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.
 அன்புடன்
சக்தி


8 comments:

Anonymous said...

very nice message its very good

sajith said...

நெட்டில் இனி படமே பார்க்க மாட்டேன்

Vijayakumar A said...

Chance ae ila.............!

ரிஷி said...

//இதன்மூலம் எங்காவது இப்படத்தை டவுன்லோடு செய்தாலோ, பார்த்தாலோ உடன் எங்களுக்கு தெரிந்துவிடும்.//

டவுன்லோடு செய்யும் நபரைத்தான் பிடிப்பார்களா? அதை அப்லோட் செய்த இணையதளத்தை முடக்க மாட்டார்களா? Crazy fellows!!! :-))

முதலில் தியேட்டர்களில் நியாயமான கட்டணம் வசூலிக்கட்டும். அதன்பின்னர் டவுன்லோட் செய்யும் நபர்களைப் பிடிக்கலாம்!

ரிஷி said...

//இதன்மூலம் எங்காவது இப்படத்தை டவுன்லோடு செய்தாலோ, பார்த்தாலோ உடன் எங்களுக்கு தெரிந்துவிடும்.//

டவுன்லோடு செய்யும் நபரைத்தான் பிடிப்பார்களா? அதை அப்லோட் செய்த இணையதளத்தை முடக்க மாட்டார்களா? Crazy fellows!!! :-))

முதலில் தியேட்டர்களில் நியாயமான கட்டணம் வசூலிக்கட்டும். அதன்பின்னர் டவுன்லோட் செய்யும் நபர்களைப் பிடிக்கலாம்!

Unknown said...

கட்டணத்தை குறைக்க மாட்டார்கள்
என்ன செய்வது ரிஷி

பகிர்தலுக்கு நன்றி.
அன்புடன்
சக்தி

Unknown said...

Admin-Paadalkal
பகிர்தலுக்கு நன்றி.
அன்புடன்
சக்தி

Unknown said...

sajith பகிர்தலுக்கு நன்றி.
அன்புடன்
சக்தி