Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, October 14, 2011

வணக்கம் தோழர்களே...




ஒரு புறம் மக்கள் உணவின்றி சாக... மற்றோர் புறம் கோவில்களில் செல்வங்கள் குவிந்து கிடக்கிறது.



தங்கள் அடிப்படை வசதிகளை கூட பெற்றுக்கொள்ள இயலாமால் தவிக்கும் மக்கள் மத்தியில் சாமிகளுக்கு செல்வங்களை அள்ளி கொடுக்கிறார்கள்



சாமி கும்பிடுகிறேன், பிரசாதம் படைக்கிறேன், மொட்டை அடிக்கிறேன் காணிக்கைகள் செலுத்துகிறேன், தங்கத்தில் சிலை வைக்கிறேன், கோயில் கட்ட நிதி கொடுக்கிறேன், நகைகள் சாத்துகிறேன்....... இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வளவு செய்கிறார்கள் கோயில்களுக்கு (சாமிக்கு) மக்கள். போதாக்குறைக்கு தங்கள் தலைகளில் தேங்காய் உடைக்கிறார்கள்.



இது மட்டுமா? சாமிக்கு மட்டுமில்லாமல் சாமியார்களுக்கு வேறு வாரி வழங்குகிறார்கள். சாமியார்களை தரிசிக்க வேறு வகை வகையாய் கட்டணங்கள். அவருக்கு பாத பூஜை செய்ய தனி கட்டணமாம். பக்கத்தில் சென்று பார்க்க ஒரு கட்டணமாம். தூரத்தில் நின்று பார்க்க ஒரு கட்டணமாம். என்னை கொடுமை இது? கொண்டு போய் கொட்டுகிறார்கள். கண் முன்னே கண்டிருக்கிறேன் இந்த காட்சிகளை எல்லாம். அப்போது எல்லாம் என் மனதில் படிக்க வேண்டிய வயதில் குப்பை பொறுக்கும் சிறுவர்களும், தேநீர் கடைகளில் கோப்பைகளை கழுவும் சிறுவர்களும் தான் வந்தார்கள்.



எதற்காக? சாமிக்கு எதற்காக இத்தனை செய்கிறார்கள்?



அவர்களின் எதாவது ஒரு விருப்பம் நிறைவேறி இருக்கலாம்.

நினைத்தது கிடைத்து இருக்கலாம்.

வசதி பெருகி இருக்கலாம்.

பெருமைக்காக செய்யலாம்.

பயந்து போய் செய்யலாம்.



காரணங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.



ஆனால்,



இதை எல்லாம் விட தன் சக மனிதனின் துயர் துடைக்கலாமே....!



சாமி, கோவில் என செல்வங்களை வழங்குவதை விட கண்முன்னே துயர்படும் மக்களுக்கு கொடுத்து உதவலாமே!



உணவின்றி உயிர் விடும் சக மனிதனுக்கு உதவலாம்.



படிக்க வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக சிறு உதவிகள் செய்யலாம்.



ஆதரவற்ற முதியோர் , குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உதவலாம். அந்த குழந்தைகளை படிக்க வைக்கலாம்.



தானமாக கொடுக்காவிட்டாலும் நான்கு பேருக்கு வருமானம் ஈட்டும் வகையில் ஏதேனும் உதவிகள் செய்யலாம்.



திருந்துவார்களா?

நன்றி
அக்னித் தமிழச்சி
அன்புடன் சக்தி

Sunday, October 09, 2011

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள்ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும்.உஷத்காலம் உஷஸ் என்னும் பெண்தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.



அன்புடன் சக்தி
நன்றி தினமலர்  

Thursday, September 15, 2011

மகாபாரதம் உண்மைதானா?

மகாபாரதத்தில் கண்ணனின் புல்லங்குழல் இசை கேட்டு மாடுகள் அவன் பின்னால் செல்வதாக நாம் படித்ததுண்டு கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு பசுக்கள் மயங்கின.
இன்று பசுக்களை மயக்கும் நவீன கண்ணன்கள் நீங்கள் பார்த்ததுண்டா கிழே உள்ள விடியோவைப் பார்க்கவும்   



ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த ஆபிரிக்க - அமெரிக்க சமூகத்தினரிடையே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான இசை வடிவத்தின் பெயர் ஜாஸ்.



ஆபிரிக்க இசை மரபுகளினதும் ஐரோப்பிய இசை மரபுகளினதும் கலப்பில் உருவானது. ஜாஸ் இசைக்கு பசுக்கள் மயங்குவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அன்று கண்ணனின் புல்லங்குழல் இசை கேட்டு மாடுகள்
மயங்கியது உண்மைதானா?
மகாபாரதம் உண்மைதானா?




Friday, September 02, 2011

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

 உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது


ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 


உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறைய ஒற்றுமையோடு  விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்கள்  நடைபெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்
சக்தி

Tuesday, July 26, 2011

பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள்

 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த   (Shri Varun Dev Mandir )வருணன் கோவில்

Hindu Temple in Pakistan
File:Hindu temple malot jhelum district.jpg




கிருஷ்ணன் கோவில் இடம் லாகூர் 










கராச்சியில் உள்ள காளிகோவில்



இந்துக்களுக்கு மட்டும் வணங்க அனுமதிக்கப்படும் கோவில்


நாராயணன் கோவில்



A worker at the Hindu crematorium outside Karachi with the ashes waiting to be collected by relatives in இந்தியா

A Hindu temple in Karachi's posh Clifton area, Pakistan. (Hindus in Karachi - 2)

Hinglaj Temple

Hindu Temple, Rohtas Fort, near Islamabad, Punjab


Hindu Temple, Mari-Indus, near Kalabagh, Punjab


Photo credit


Hindu Temple, Rawalpindi, Punjab



Hinglaj Mandir or Nani Mandir, Hingol National Park, Baluchistan
பாக்கிஸ்தானில் உள்ள பல கோவில்கள் சேதமடைதுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானின் தற்ப்போதைய அரசு  பாக்.,கில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்களில் ஒருபகுதியாக, லாகூர், கராச்சி உட்பட முக்கிய நகரங்களில் உள்ள 10 கோவில்கள் பாக்., அரசின் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. பல லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் நேற்று முடிவடைந்தன. இதன்மூலம், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது பாராட்டப்பட வேண்டிய செய்தி. பாக்கிஸ்தானில்  இதுபோன்று பல திட்டங்கள் தொடரட்டும்