Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Wednesday, July 11, 2012

நீங்க சரியா சாப்பிடுறீங்களா?


நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன. திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம். இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!
                                                                                         உமா வெங்கடேஷ்
அன்புடன்                                                        நாடி சமன்படுத்துதல் மருத்துவர்
  சக்தி

Friday, April 06, 2012

இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்

ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும் திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து பருகவேண்டும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் அதிகரிக்காது. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.




அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.



சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.



ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.



திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.



அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்
அன்புடன்                                                                                                    நன்றி தினகரன்
சக்தி

Friday, March 30, 2012

தொண்டை வலியில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள்



தொண்டையில் பிரச்னை தொடங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம்.


சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்று தான் தொண்டையில் தொடங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.



தொண்டையில் புண் இருக்கும் போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும்.




ஆனால் யாரும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும் போது வைரஸ் தொற்றும், சுகாதார மற்ற உணவுகளை உட்கொள்ளும் போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது.



இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. ஸ்டிரெப்போகாக்கஸ் கிருமி நோய் பரவலுக்கு காரணமாகிறது. தொற்று பரவும் போது டான்சிப்ஸ் வீங்கும், இதனால் எச்சில் விழுங்கும் போது வலி ஏற்படும்.



தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். சளி, எச்சில் மற்றும் கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.



தொடக்கத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் போது நோய் கடுமையாகி மூச்சுக் குழலில் தொற்று உண்டாகி வீக்கத்தால் காற்றுப் பாதை அடைபடலாம். இதனால் மூச்சு விடுவது மற்றும் விழுங்குவது இரண்டுமே சிரமமாகும்.



கடும் தலைவலி மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தொண்டைப் புண்ணுக்கு மருந்துகள் தரப்பட்டால் அவற்றை முழுமையாக உட்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துவதால் சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது.



இவற்றை கண்டு கொள்ளாமல் விடும் போது ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உண்டாக்கும். எனவே தொண்டை வலி ஏற்பட்டவுடன் காது மூக்கு தொண்டை நிபுணரை அணுகி ஆண்டிபயாடிக் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.



பாதுகாப்பு முறை: தொண்டையில் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள்(தண்ணீர், சூப்) எடுத்துக் கொள்ளலாம்.



இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும், கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும் இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.



சப்பிச் சாப்பிடும் மாத்திரை மற்றும் இனிப்பில்லாத சூயிங்கம் ஆகியவற்றை சுவைப்பதால் அதிக உயிழ்நீர் சுரந்து தொண்டையை சுத்தம் செய்யும். இந்த மாதிரியாக நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் அவசியம்.



அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். புகை பிடித்தலை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம், கைகளால் முகத்தை துடைப்பதை தவிர்க்கலாம்.



குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் தொடர்ந்து மூன்று முறைக்கும் மேல் டான்சில் நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டியது அவசியம்.



இல்லாவிட்டால் அதில் இருந்து கிருமிகள் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. டான்சில் அறுவை சிகிச்சை செய்வதால் குரல் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த பாதிப்பும் இருக்காது.



சுகாதாரமான உணவு, குளிர் பானம், தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் தொண்டை வலியில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

அன்புடன் சக்தி

Friday, February 10, 2012

ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் ஆண்மை குறைவு?

 தினந்தோறும் ஜீன்ஸ்பேன்ட் அணிபவர நீங்கள் அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள்.ஜீன்ஸ்பேன்ட் அணிவது இன்று நாகரீகத்தின் அடையாளமாக உள்ளது.ஆனால் ஜீன்ஸ்பேன்ட் அணியும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு வரவாய்ப்புள்ளது.இந்தியா போன்ற பெப்பமான நாடுகளுக்கு இந்தஉடையால்  உடலுக்கு அதிகமான 
பெப்பத்தை உண்டாக்கி 
அதன்மூலம் பல தோல் வியாதிகளை உருவாக்குவதோடு ஆண்மைக்குறைவையும் ஏற்படுத்துகிறது .ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி உருவாகும் வாய்ப்பையே குறைக்கிறது.மேலும் இந்த உடையால்  ஆண்களுக்கு மட்டும்மன்றி பெண்களுக்கும் மாதவிலக்கு பிரச்சனைகளையும் மலட்டுத்தன்மைகளையும் ஏற்படுத்துகிறது.எனவே  ஜீன்ஸ்பேன்ட் அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்.குளிர் பிரேதேசங்களில்  உள்ளவர்களுக்கு பிரச்சனை கிடையாது.

அன்புடன்
சக்தி

Wednesday, September 28, 2011

டீயை குடியுங்கள்-பற்களில் காரை படிவதை டீ தடுக்கிறது

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு. டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால்
உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.
சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது.



எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.



வயிற்றுவலி(அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.



டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.



வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ”ப்ளேவோனாய்ட்ஸ்” தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.



டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.



மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.



டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.



இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்,“மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.



உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.




அன்புடன் சக்தி

Saturday, September 17, 2011

புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து

உலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்தை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

. 'ஸ்மார்ட் பாம்' என்று பெயரிட்டுள்ள இந்த மருந்து அனைத்து வகை கேன்சர்களையும் குணப்படுத்தும் என தெரிவித்துள்ளனர்



'கோல்சிசைன்' என்ற இந்த மருத்துவமுறை முதலில் எலிகளுக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கபட்டது. இந்த பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளதாகவும் இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு சோதிக்கப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



'ஆன்டம் குரோகஸ்' என்ற ஒருவகை மலரில் இருந்து இந்த மருந்தின் மூலபொருள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழித்துவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வேறு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

மனிதர்களுக்கு அளிக்கப்படும் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மருந்து இன்னும் 7 ஆண்டுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.