Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Tuesday, July 10, 2012

கொஞ்சும் மழலைகளின் அசத்தும் புகைப்படங்கள்

தனது செயலினால்அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் குழந்தைகளின் அழகினைப் படத்தில் காணலாம்.
B

அன்புடன்
சக்தி

Friday, October 21, 2011

.மழை நீரில் நனையாமல் மக்களைக் காக்கும் சிலை










மர்லின் மன்றோ. உலகம் முழுவதும் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக  வலம் வந்தார்.


ஹாலிவுட் திரையுலகை 1947 முதல் 1962 வரை கலக்கியவர் மர்லின் மன்றோ. உலகம் முழுவதும் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக  வலம் வந்தார். தனது 36-வது வயதில் அவர் மர்மமாக மரணம் அடைந்தார். விஷம் தின்று தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இன்னும் சிலர் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் கிளப்பினர்.
மர்லின் மன்றோ மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான்கென்னடியுடனும் இணைத்து பேசப்பட்டார்  மர்லின் மன்றோவின் 26 அடி உயரமான சிலையொன்று அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் கடந்தஜூலை மாதம்  திறந்துவைக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்தாலான இந்த சிலை 15422 கிலோகிராம் எடையுடையது. சேவார்ட் ஜோன்ஸன் எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கியுள்ளார். 1955 ஆம்ஆண்டு வெளியான த செவன் இயர் இட்ச் எனும் திரைப்படத்தில் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யம் பெற்ற காட்சியொன்றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டுள்ளது. மேற்படி திரைப்படக் காட்சியில் மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை கவுண் கடந்த மாதம் 46 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சிலைஇன்று.மழை நீரில் நனையாமல் மக்களைக் காக்கும் சிலை ஆகிப்போனது 
  
  

அன்புடன் சக்தி

Monday, August 29, 2011

29 வயதில் தாத்தா ஆன வாலிபர் -படங்களுடன்

29 வயதான பிரிட் இளம் வயது தாத்தா
29 வயதான பிரிட்டின் மகள் தியா.
 இவர்  14 வயதில் குழந்தை பெற்றுள்ளார்.
இதனால் பிரிட் உலகிலேயே  இளம் வயது தாத்தா ஆகியுள்ளார். 
 இது நம்ப கடினமாக இருக்கிறது. பிரிட்டனில் சாத்தியமானதுதான்.
இளைய குடும்பத்தின்  புகைப்படங்களை பார்க்கவும்.





  

Friday, August 19, 2011

இப்படியும் ஒரு வைத்தியமா இல்ல பைத்தியமா-( படங்களுடன் விளக்கம்)



இங்கே தலை வைத்துப் படுத்திருப்பவர்கள்
நம்மஊரு தலைவர்களைப்  போல இரயிலை  நிறுத்தும் போராட்டத்திர்க்கு வரவில்லை.உடம்பில் உள்ள சில நோய்களை போக்க  இங்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார்கள்.இந்தோனேசியாவில் வாழும் மக்கள் ஒரு புது முறையான வைத்தியத்தை கண்டு பிடித்து உள்ளனர். அந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர். இது அவர்கள் உடம்பில் உள்ள சில நோய்களை குணமாக்குவதாக சொல்கின்றனர். ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் இதை செய்கின்றனர். இதற்கு நல்லா பயன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

இங்குள்ள மக்கள் எலெக்ட்ரிக் ரயில் தண்டவாளங்களில் மின்சக்தி உள்ளதால் அது தங்கள் வியாதிகளை குனமாக்குவதாக சொல்கின்றனர். ஆனால் இவர்கள் இப்படி செய்வது ரயில் லில் வரும் பயணிகளையும் ரயில் ஓட்டுநர்களையும் மிகவும் பயமுறுத்துகிறது.


நண்பர்களே நீங்கள் யாரும் இந்த முயற்சியில் இறங்கவேண்டாம்.
நம்ம ஊருஇரயில் எப்ப வரும் எப்புடிவருமுன்னு யாருக்கும் தெரியாது .
 
இப்படியும் ஒரு  வைத்தியமா இல்ல பைத்தியமா? நண்பர்களே உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.
அன்புடன்
 சக்தி

Thursday, August 11, 2011

அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு

பாம்புகளில் எத்தனையோ வகைகள் உண்டு.அதில் வெள்ளை நிற நாகபாம்பு மிகவும் அபூர்வமானதாகும்.இலங்கையில் ஐந்து அடி நீளம் கொண்ட அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு ஒன்று ஒருவரின் வீட்டின் கோழிக் கூட்டில் பிடிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, வியாபாரிமூலை, இராவாலை பகுதியில் சி.இராதாகிருஸ்ணன் என்பவரின் வீட்டிலுள்ள கோழிக்கூட்டில் இந்த வெள்ளைநிற நாகம் பிடிபட்டது.தற்போது இந்தப் பாம்பைப் பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடிய வண்ணம் உள்ளனர்.இது தொடர்பாக வவுனியா வனவிலங்குப் பிரிவுக்கு வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  இதன் புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்