Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Friday, February 03, 2012

டைட்டானிக் கப்பல்பற்றிய புதிய செய்தி (படங்கள் இணை ப்பு)

அட்லான்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி சமீபத்தில் டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதுகடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கிலாந்தின் சவுதாம்டன் பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் புறப்பட்டது.



உலகிலேயே மிக பிரமாண்டமான முதல் சொகுசு கப்பலான டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே வடக்கு அட்லான்டிக் கடலில் மிகப்பெரிய பனிப்பாறையில் 15ம் திகதி மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணம் செய்த 2,223 பேரில் 1517 பேர் உயிரிழந்தனர். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் விபத்தாக இன்றளவும் உள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் டைட்டானிக். உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் உள்பட பலரும் நடித்த படம்.


இதில் ஒரு காட்சியில் கப்பல் உடைய தொடங்கிய பிறகு பயணிகள் பீதியுடன் இங்கும் அங்கும் ஓடுவார்கள். உயிர் பிழைப்பதற்காக மீட்பு படகுகளில் ஏறுவார்கள். அப்போதுகூட கப்பலின் பேண்ட் வாத்திய குழுவினர் பதற்றப்படாமல் வயலின் வாசிப்பார்கள்.கப்பல் மூழ்கும் வரை அவர்களது இசை தொடரும். இது வெறும் காட்சி மட்டுமல்ல உண்மையான நிகழ்வு ஆகும். பேண்ட் வாத்திய கலைஞர்கள் 8 பேர் கடைசி வரை இசைக் கருவிகள் வாசித்ததாக அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அப்போது மூழ்கிய வயலின் தற்போது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அக்கப்பலில் இருந்த பேண்ட் மாஸ்டர் வாலஸ் ஹர்ட்லி பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வாலஸ் ஹர்ட்லி என்ற இசைக் கலைஞர், தனது வயலினை அணைத்த நிலையிலேயே கடலில் மூழ்கினார். அந்த நிலையிலேயே அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வயலின்தான் தற்போது கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரிடம் இந்த வயலின் பல ஆண்டு காலமாக இருந்துள்ளது. வாலசுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் மரியா ராபின்சன், டைட்டானிக் விபத்து நடந்த சில ஆண்டுகளில் இதை தன்னிடம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். டைட்டானிக் வயலின் குறித்த இதர தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.






Friday, October 28, 2011

ஒரு தேசியத்தலைவரை சாதியத்தலைவராக்கிய அரசியல்


படிமம்:PMThevar.gif

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்னவர்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.இவர் ஜாதி தலைவர் இல்லை. அரசியல்வாதிகளில் அப்பழுக்கற்றவர்.

 சுதந்திர போராட்ட வீரர்,


 கடைசிவரை திருமணமே

செய்துகொள்ளாமல் தனது சொத்துக்களை மக்களுக்கே கொடுத்த தியாகி.
இந்து தாய்க்கு பிறந்து, இஸ்லாமிய பெண்ணால் வளர்க்கப்பட்டு, கிறிஸ்தவ பாதிரியார்களால் கல்வி பெற்றவர்.



அடுத்தவரின் பணம் ஒரு ரூபாய்க்கு கூட ஆசைப்படாத ஆன்மீகவாதி. தேசியமும்

தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன அற்புத மனிதர். இப்படிப்பட்ட ஒருவரை

 இந்த தேசியத் தலைவரை சிலர் தங்களின் சுய

லாபத்திற்காக ஜாதித்தலைவராகத் திரித்துவிட்டது வருத்தம் தரும் விஷயமாக

இருக்கிறது.
இன்று குறிப்பிட்ட ஜாதிமக்கள் மட்டுமே  இவரைப்போற்றுகின்றனர்.
உண்மையில்  இவர் எல்லோருக்கும்  பொதுவானதேசியத் தலைவர். 


பசும்பொன் தேவர் 4000 நாட்களை சிறையிலேயே கழித்தார்.
1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர்.















அன்புடன் சக்தி

Wednesday, September 07, 2011

உலகின் மிக பெரிய சிற்பம்-கிரேஸி ஹார்ஸ் புகைப்படங்கள்

 உலகின் மிக பெரிய சிற்பம்-கிரேஸி ஹார்ஸ் நினைவுச்சின்னம்




அமெரிக்காவில்  தெற்கு டகோட்டா அருகில் பிளாக் ஹில்ஸ் மலை மீது செதுக்கப்பட்ட  தேசிய நினைவு பாரம்பரியம் உள்ள, ஒரு  நினைவுச்சின்னம் 1948 - ல் தொடங்கி இன்னும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.இது நிதி  பிரச்னைகாரணமாக முடிவடையாமல் உள்ளது.இது முடியும் பொழுது  641 அடி (195 மீ) அகலம் மற்றும் 563 அடி (172 மீ) -இருக்கும்






 கிரேஸி ஹார்ஸ் கல்லறை

அது கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்இந்தியனை நினைவுகூர்வதாக இருக்கிறது.இவர்  அமெரிக்கர்களுக்கும்  செவ்இந்தியர்களுக்கும் டிசம்பர் 21, 1866 -ல்   நடந்த  போரில் செவ்இந்தியர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் .     


Friday, August 19, 2011

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.

 


ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.



பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.



18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்.



இராமநாதபுரம் மாமன்னர் செல்ல முத்து சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ம் ஆண்டு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார்.



ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.



ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.



திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.



கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.



அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.



விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.



வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.



அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.



1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.



வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.



சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.



1790ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியானார்.



1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கியவர் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.



முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.



இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.



வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.