Thursday, August 11, 2011

மதநல்லிணக்கத்தை வெளிக்காட்டிய கோயில் விழா

மேலூர்: மேலூர் அருகே சாம்பிராணிப்பட்டியில் சேங்கை வெள்ளிமலையாண்டி கோயிலில் நடந்த விழாவில் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். மேலூர் அருகில் உள்ள சாம்பிராணிபட்டியில் 500 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டிலிருந்து வந்தவர்கள் குடியேறினர். அவர்கள் தான் சாம்பிராணிபட்டி என பெயர் சூட்டியதாக முன்னோர் கூறுகின்றனர். இந்த வம்சா வழியில் வந்தவர்கள், தங்களுக்கு உதவியாக இந்துக்களில் மூப்பனார் மற்றும் யாதவ சமுதாயத்தினரை இணைத்துக் கொண்டனர். ஊரில் மூப்பனார் இனத்திற்கு நாட்டாமை வகையறா என கருதி முதல் மரியாதை, யாதவர்களுக்கு கீதாரி வகையறா என கருதி இரண்டாவது மரியாதை, முஸ்லிம்களுக்கு முதலாளி வகையறா எனக்கருதி மூன்றாம் மரியாதையும் செலுத்தப்படுகிறது. மந்தை சேங்கை வெள்ளி மலையாண்டி கோயிலின் ஆடித் திருவிழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மூன்று சமுதாயத்தினருக்கும் பூஜாரிகள் மரியாதை செய்தனர். முஸ்லிம்கள் இந்துக்களுடன் இணைந்து ஊர்வலமாக புறப்பட்டு ஊருக்கு வெளியில் உள்ள பொட்டல் நொண்டிக் கோயிலில் பழம் போடுதல் விழாவை நடத்தினர். அன்வர் பேக் தலைமையில் அனைத்து முஸ்லிம்களும் இதில் கலந்து கொண்டனர். சாமி கும்பிட்ட பிறகு அ.வல்லாள பட்டியை சுற்றிய அனைத்து கிராமங்களுக்கும் கோயில் சார்பில் பாக்கு, பழம் கொடுக்கப்பட்டது.

நன்றி தினமலர்






No comments: