Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, November 04, 2011

தமிழர்கள் பார்க்கவேண்டிய படம்

போதி தருமன்- சூர்யா நடிக்கும் “ஏழாம் அறிவு” படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன் தான். போதி தருமன் போன்று வாழ்ந்த  பல தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதன்மூலம்   தமிழர்களின் நாகரிகம் மட்டும்மின்றி அறிவியல் திறனையும் அறிந்துகொள்ளமுடியும்.

இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அன்று உலகிற்கு அறிவியலைச் சொல்லிக்கொடுத்தோம்.இன்று .....?நம் தேசத்தின் அறிவியல் என்பது வாழ்வு சார்ந்தது. அதை நாம் காரணமே இல்லாமல் புறக்கணித்து இன்று வெளிநாடுகளில் கையேந்துகிறோம்.



  'தமிழர் பண்பாடு சிறந்தது. அதன் சரித்திரம் மிக பன்மையானது. அதை மறந்துகொண்டிருக்கும் தலைமுறை அதை மீண்டும் போற்ற வேண்டும். அதன் பெருமையை காக்க வேண்டும்.' - இந்த மிக முக்கியமான கருத்தை உணர்த்தும் படம் ஏழாம் அறிவு.





கிபி 5 ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் தான் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். அதன் பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.


கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.






புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் போதி தர்மன். பின்னர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர் தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது. விடியோவை பர்ர்க்க இங்கு சொடுக்கவும்





அன்புடன் சக்தி

Thursday, September 15, 2011

சூர்யாவின் மறுபக்கம் (வீடியோ இணைப்பு)




சூர்யா,முன்னணி கதாநாயகன்,இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்
ஆனால் எத்தனை பேருக்குத்தெரியும் அவர் நடத்தும் அகரம் பவுண்டேஷன்

.நான் அவர்  படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று
சொல்லவரவில்லை.
வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.என்று சூர்யா
கூறுவதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண்-9841091000.






 

அன்புடன்
சக்தி








Tuesday, August 23, 2011

நெட்டில் டௌன்லோட் செய்பவரா நீங்கள்?முதலில் இதைப் படியுங்கள்



 ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே, அந்தபடம் திருட்டு வி.சி.டி.,யாகவும், ஆன்லைனிலும் ஒளிப்பரப்பாகி விடுகிறது. இதனை தடுக்க திரைத்துறையினரும், அரசும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுத்தியுள்ளது, பி.வாசு இயக்கத்தில், ஆர்.கே., நடித்து, விரைவில் வெளிவர இருக்கும் புலிவேஷம் படக்குழு.







படத்தில் ரூ.10லட்சம் செலவில் டிஜிட்டல் பாதுகாப்பு செய்துள்ளார் நடிகர் ஆர்.கே., இதன்படி படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்காவது ஆன்லைனில் இந்தபடத்தை டவுன்லோடு செய்தாலோ அல்லது அப்படியே திரையில் பார்த்தாலோ, அடுத்த 15நிமிடங்களில் புலிவேஷம் திருட்டு வி.சி.டி., கண்காணிப்பு குழுவுக்கு தெரிந்துவிடும். இந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது. மேலும் ஆன்லைன் தவிர்த்து, திருட்டு டி.வி.டியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.






இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்.கே., கூறுகையில், ஆன்லைன் மூலம் திருட்டுதனமாக படம்பார்ப்பவர்களும், அதன்மூலம் திருட்டு டி.வி.டி., தயாரிப்பதை கண்டுபிடிக்கவும் புதிய தொழில்நுட்பத்தை, புலிவேஷம் படத்தில் புகுத்தியுள்ளனர். இதன்மூலம் எங்காவது இப்படத்தை டவுன்லோடு செய்தாலோ, பார்த்தாலோ உடன் எங்களுக்கு தெரிந்துவிடும். உடனே சம்மந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்ததொழில் நுட்பத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை. புலிவேசம் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.
 அன்புடன்
சக்தி