இங்கே தலை வைத்துப் படுத்திருப்பவர்கள்
நம்மஊரு தலைவர்களைப் போல இரயிலை நிறுத்தும் போராட்டத்திர்க்கு வரவில்லை.உடம்பில் உள்ள சில நோய்களை போக்க இங்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார்கள்.இந்தோனேசியாவில் வாழும் மக்கள் ஒரு புது முறையான வைத்தியத்தை கண்டு பிடித்து உள்ளனர். அந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர். இது அவர்கள் உடம்பில் உள்ள சில நோய்களை குணமாக்குவதாக சொல்கின்றனர். ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் இதை செய்கின்றனர். இதற்கு நல்லா பயன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இங்குள்ள மக்கள் எலெக்ட்ரிக் ரயில் தண்டவாளங்களில் மின்சக்தி உள்ளதால் அது தங்கள் வியாதிகளை குனமாக்குவதாக சொல்கின்றனர். ஆனால் இவர்கள் இப்படி செய்வது ரயில் லில் வரும் பயணிகளையும் ரயில் ஓட்டுநர்களையும் மிகவும் பயமுறுத்துகிறது.
நண்பர்களே நீங்கள் யாரும் இந்த முயற்சியில் இறங்கவேண்டாம்.
நம்ம ஊருஇரயில் எப்ப வரும் எப்புடிவருமுன்னு யாருக்கும் தெரியாது .
இப்படியும் ஒரு வைத்தியமா இல்ல பைத்தியமா? நண்பர்களே உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.
அன்புடன்
சக்தி
No comments:
Post a Comment