Tuesday, August 30, 2011

ரமலான் வாழ்த்துக்கள்.

அன்புள்ள இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.







அன்புடன் 
சக்தி


                                                               

Monday, August 29, 2011

29 வயதில் தாத்தா ஆன வாலிபர் -படங்களுடன்

29 வயதான பிரிட் இளம் வயது தாத்தா
29 வயதான பிரிட்டின் மகள் தியா.
 இவர்  14 வயதில் குழந்தை பெற்றுள்ளார்.
இதனால் பிரிட் உலகிலேயே  இளம் வயது தாத்தா ஆகியுள்ளார். 
 இது நம்ப கடினமாக இருக்கிறது. பிரிட்டனில் சாத்தியமானதுதான்.
இளைய குடும்பத்தின்  புகைப்படங்களை பார்க்கவும்.





  

Tuesday, August 23, 2011

நெட்டில் டௌன்லோட் செய்பவரா நீங்கள்?முதலில் இதைப் படியுங்கள்



 ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே, அந்தபடம் திருட்டு வி.சி.டி.,யாகவும், ஆன்லைனிலும் ஒளிப்பரப்பாகி விடுகிறது. இதனை தடுக்க திரைத்துறையினரும், அரசும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுத்தியுள்ளது, பி.வாசு இயக்கத்தில், ஆர்.கே., நடித்து, விரைவில் வெளிவர இருக்கும் புலிவேஷம் படக்குழு.







படத்தில் ரூ.10லட்சம் செலவில் டிஜிட்டல் பாதுகாப்பு செய்துள்ளார் நடிகர் ஆர்.கே., இதன்படி படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்காவது ஆன்லைனில் இந்தபடத்தை டவுன்லோடு செய்தாலோ அல்லது அப்படியே திரையில் பார்த்தாலோ, அடுத்த 15நிமிடங்களில் புலிவேஷம் திருட்டு வி.சி.டி., கண்காணிப்பு குழுவுக்கு தெரிந்துவிடும். இந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது. மேலும் ஆன்லைன் தவிர்த்து, திருட்டு டி.வி.டியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.






இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்.கே., கூறுகையில், ஆன்லைன் மூலம் திருட்டுதனமாக படம்பார்ப்பவர்களும், அதன்மூலம் திருட்டு டி.வி.டி., தயாரிப்பதை கண்டுபிடிக்கவும் புதிய தொழில்நுட்பத்தை, புலிவேஷம் படத்தில் புகுத்தியுள்ளனர். இதன்மூலம் எங்காவது இப்படத்தை டவுன்லோடு செய்தாலோ, பார்த்தாலோ உடன் எங்களுக்கு தெரிந்துவிடும். உடனே சம்மந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்ததொழில் நுட்பத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை. புலிவேசம் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.
 அன்புடன்
சக்தி


Friday, August 19, 2011

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.

 


ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.



பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.



18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்.



இராமநாதபுரம் மாமன்னர் செல்ல முத்து சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ம் ஆண்டு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார்.



ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.



ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.



திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.



கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.



அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.



விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.



வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.



அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.



1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.



வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.



சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.



1790ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியானார்.



1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கியவர் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.



முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.



இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.



வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.

இப்படியும் ஒரு வைத்தியமா இல்ல பைத்தியமா-( படங்களுடன் விளக்கம்)



இங்கே தலை வைத்துப் படுத்திருப்பவர்கள்
நம்மஊரு தலைவர்களைப்  போல இரயிலை  நிறுத்தும் போராட்டத்திர்க்கு வரவில்லை.உடம்பில் உள்ள சில நோய்களை போக்க  இங்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார்கள்.இந்தோனேசியாவில் வாழும் மக்கள் ஒரு புது முறையான வைத்தியத்தை கண்டு பிடித்து உள்ளனர். அந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர். இது அவர்கள் உடம்பில் உள்ள சில நோய்களை குணமாக்குவதாக சொல்கின்றனர். ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் இதை செய்கின்றனர். இதற்கு நல்லா பயன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

இங்குள்ள மக்கள் எலெக்ட்ரிக் ரயில் தண்டவாளங்களில் மின்சக்தி உள்ளதால் அது தங்கள் வியாதிகளை குனமாக்குவதாக சொல்கின்றனர். ஆனால் இவர்கள் இப்படி செய்வது ரயில் லில் வரும் பயணிகளையும் ரயில் ஓட்டுநர்களையும் மிகவும் பயமுறுத்துகிறது.


நண்பர்களே நீங்கள் யாரும் இந்த முயற்சியில் இறங்கவேண்டாம்.
நம்ம ஊருஇரயில் எப்ப வரும் எப்புடிவருமுன்னு யாருக்கும் தெரியாது .
 
இப்படியும் ஒரு  வைத்தியமா இல்ல பைத்தியமா? நண்பர்களே உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.
அன்புடன்
 சக்தி

Wednesday, August 17, 2011

பெண் உருவத்தில் பூக்கள்

Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது.
அன்புடன் சக்தி


நன்றி கிங் தமிழ்


Thursday, August 11, 2011

அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு

பாம்புகளில் எத்தனையோ வகைகள் உண்டு.அதில் வெள்ளை நிற நாகபாம்பு மிகவும் அபூர்வமானதாகும்.இலங்கையில் ஐந்து அடி நீளம் கொண்ட அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு ஒன்று ஒருவரின் வீட்டின் கோழிக் கூட்டில் பிடிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, வியாபாரிமூலை, இராவாலை பகுதியில் சி.இராதாகிருஸ்ணன் என்பவரின் வீட்டிலுள்ள கோழிக்கூட்டில் இந்த வெள்ளைநிற நாகம் பிடிபட்டது.தற்போது இந்தப் பாம்பைப் பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடிய வண்ணம் உள்ளனர்.இது தொடர்பாக வவுனியா வனவிலங்குப் பிரிவுக்கு வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  இதன் புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்








மதநல்லிணக்கத்தை வெளிக்காட்டிய கோயில் விழா

மேலூர்: மேலூர் அருகே சாம்பிராணிப்பட்டியில் சேங்கை வெள்ளிமலையாண்டி கோயிலில் நடந்த விழாவில் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். மேலூர் அருகில் உள்ள சாம்பிராணிபட்டியில் 500 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டிலிருந்து வந்தவர்கள் குடியேறினர். அவர்கள் தான் சாம்பிராணிபட்டி என பெயர் சூட்டியதாக முன்னோர் கூறுகின்றனர். இந்த வம்சா வழியில் வந்தவர்கள், தங்களுக்கு உதவியாக இந்துக்களில் மூப்பனார் மற்றும் யாதவ சமுதாயத்தினரை இணைத்துக் கொண்டனர். ஊரில் மூப்பனார் இனத்திற்கு நாட்டாமை வகையறா என கருதி முதல் மரியாதை, யாதவர்களுக்கு கீதாரி வகையறா என கருதி இரண்டாவது மரியாதை, முஸ்லிம்களுக்கு முதலாளி வகையறா எனக்கருதி மூன்றாம் மரியாதையும் செலுத்தப்படுகிறது. மந்தை சேங்கை வெள்ளி மலையாண்டி கோயிலின் ஆடித் திருவிழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மூன்று சமுதாயத்தினருக்கும் பூஜாரிகள் மரியாதை செய்தனர். முஸ்லிம்கள் இந்துக்களுடன் இணைந்து ஊர்வலமாக புறப்பட்டு ஊருக்கு வெளியில் உள்ள பொட்டல் நொண்டிக் கோயிலில் பழம் போடுதல் விழாவை நடத்தினர். அன்வர் பேக் தலைமையில் அனைத்து முஸ்லிம்களும் இதில் கலந்து கொண்டனர். சாமி கும்பிட்ட பிறகு அ.வல்லாள பட்டியை சுற்றிய அனைத்து கிராமங்களுக்கும் கோயில் சார்பில் பாக்கு, பழம் கொடுக்கப்பட்டது.

நன்றி தினமலர்






Wednesday, August 10, 2011

Tuesday, August 09, 2011

மகிழ்ச்சியுடன் வாழும் வினோதமான தம்பதிகள் அஹமத் பாத்திமா

கால்  இல்லாமல். 25 வயதான பாத்திமா
. கையில்லாமல் 26 வயதான அஹமத்
.
  கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் வாழும் இந்த தம்பதிகளை நீங்களும் பாருங்கள்.











நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதற்கு இவர்களே உதாரணம்.



















Monday, August 08, 2011

பெண்களின் முன்னேற்றம்?

  பெண்களின் முன்னேற்றம்
   பெண்கள்  எத்தனையோ துறைகளில் 
சாதனை படைத்து வருகிறார்கள்.சிலபெண்கள்   இப்படியும்
 சாதனை படைக்கிறார்கள்.



பேருந்து ஜன்னல் வழி தாவி ஏறும் பெண்
 
 

ஆண்களுக்கு நிகராக முன்னேறுங்கள்
அதற்காக இப்படியா?






 
 

Saturday, August 06, 2011

13 ஆண்டுகளாக ரமலான் நோன்பு நோற்கும் இந்து சகோதரிகள்




சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கம்மாபுரிபட்டினத்தை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் விஜயராஜ் அவர்களின் மனைவி சாந்தி என்ற சகோதரியும், அவர்களின் மகள் சண்முகப்பிரியா என்ற சகோதரியும் புனிதமிக்க ராமலாளன் நோன்பு நோற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தபோது வியப்பின் உச்சிக்கு சென்றோம். காரணம் சாந்தி அவர்கள் இன்று நேற்றல்ல சுமார் 13 ஆண்டுகளாகவும், அவர்களது மகள் சண்முகப்பிரியா சுமார் ஒன்பது ஆண்டுகளாகவும் ரமலான் முழுவதும் நோன்பு நோற்பது தான் வியப்பிற்கு காரணம். அதே நேரத்தில் இவர்கள் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு ஒரு காரணம் உண்டு. சகோதரி சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு தனது நகையை தவற விட்டிருக்கிறார். நோன்பு வைத்து வேண்டிக் கொண்டால் நகை திரும்ப கிடைக்கும் என்ற சில முஸ்லிம் பெண்களின் ஆலோசனைப்படி,


சாந்தி நோன்பு வைத்துள்ளார். முஸ்லிம் பெண்கள் சொன்னபடி திருடுபோன நகை திரும்பக் கிடைக்கவே அந்த ஆண்டு முதல் தானும் தொடர்ந்து நோன்பு நோற்றது மட்டுமன்றி, தனது மகளையும் நோன்பு நோற்குமாறு செய்திருக்கிறார். சகோதரி சாந்தி அவர்களின் கணவர் விஜயராஜ் அவர்கள், தனது மனைவி-மகளின் நோன்பை ஆதரிப்பதோடு, புத்தாடை எடுத்து பெருநாளையும் கொண்டாடி வருகிறாராம்.
நன்றி தினத்தந்தி

மேலும் இவர்களைப் போல ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்
 லேத் பட்டறை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன், 11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு இருந்து வருகிறார். கீழக்கரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவர், போஸ்ட் ஆபீஸ் தெருவில் லேத் பட்டறை வைத்து நடத்துகிறார்.இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்க செயலர்.


இவர் கூறியதாவது: கீழக்கரையைச் சேர்ந்த, மறைந்த அரசியல் பிரமுகருக்கும், எனக்கும் கடந்த 2000ல் ரம்லான் நோன்பு கடைபிடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டது. அந்த ஆண்டு நோன்பு நூற்றேன். அதன்பின் தொடர்ந்து ஆண்டுதோறும் முழுமையாக நோன்பு கடை பிடித்து வருகிறேன். இதற்காக அதிகாலையில், எனக்காக எனது மனைவி உணவு தயார் செய்து தருகிறார். நண்பர்கள் அழைத்த போதும் பணிபளுக் காரணமாக பள்ளிவாசல் செல்ல முடியவில்லை. எனது பட்டறையில், முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து நோன்பு திறந்து வருகிறேன். இதில் மன திருப்தி ஏற்படுவதுடன், மக்களிடையே நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.














Wednesday, August 03, 2011

தொழுகை செய்யும் மரம்


ஒரு மரம் பார்ப்பதற்கு  இறைவனை நினைத்து

தொழுகை செய்யும் மனிதனைப் போலவே உள்ளது . 




இன்னும் இதைப்போன்று அதிசயப் புகைப்படங்கள்


 தங்களின் கருத்துரைகளை எழுதவும்