இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது சுமார் 2 லட்சம் ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். சுமார் 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கதி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை.
தமிழ் இனத்தை அழிக்க சிங்கள காட்டுமிராண்டிகள் நடத்திய அந்த வெறி தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சி அடைய வைத்தன. ஆனால் இந்திய அரசு, சிங்களர்களுக்கு ஆதரவாக இருந்தால், இலங்கை மீது குறை சொல்ல பல நாடுகள் தயங்கின.
என்றாலும் உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர் கள் உருவாக்கியுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' இலங்கையில் நடந்த இனப் படுகொலையை அம்பலப்படுத்தின. அதன் பயனாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றின.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை லண்டனில் செயல்படும் 'சேனல்-4' தொலைக்காட்சியும், 'தி கிண்டி பென்டன்ட்' நாளிதழும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தின. இதனால் சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இலங்கை போர் குற்றங்களை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேற்று வெளியிட்டது. அவை ஈழத்து மக்கள் செத்து மடிந்த கண்ணீர் காட்சிகளாக உள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள படக்காட்சிகளில் ஈழத் தமிழர்கள் குவியல், குவியலாக செத்துக் கிடப்பது தெரியவந்துள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். பலரது உடல் குண்டு வீச்சில் சிதைந்துள்ளது. பார்ப்பவர்களை பதை பதைக்க செய்யும் வகையில் 25-க்கும் மேற்பட்ட புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 3 நிமிடம் ஓடும் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.
செல்போனில் இவை படம் பிடிக்கப்பட்டுள்ளன. வக்கீல் வாசுகி முருகதாஸ் இந்த புகைப்பட காட்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. ஈழத் தமிழர்கள் இன படுகொலை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களாகக் இவை கருதப்படுகின்றன.
அன்புடன் நன்றி மாலைமலர்
சக்தி
No comments:
Post a Comment