மதுரை மாவட்டம் மேலூர் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். மேலூர் மற்றும்
சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெளிநாடுகளில் ஏராளமானோர் வேலை செய்து
வருகின்றனர். சென்னையில் அலுவலகங்களில் பலர் வேலை செய்கின்றனர். மேலூரில் இருந்து
ஏராளமானவர்கள் என்ஜினீயரிங் மற்றும் உயர்கல்வி படித்து வருகின்றனர். இவர்கள்
அனைவரும் சென்னை செல்ல பல பஸ்கள் மேலூர் உள்ளே வராமல் பைபாஸ் வழியாக செல்கின்றது.
இதனால் மேலூரில் இருந்து சென்னை பஸ்சில் செல்ல மேலூர் பகுதி பொதுமக்கள்
சிரமப்பட்டனர்.
மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. சாமி இது பற்றி சட்டசபையில் இக்கோரிக்கையை
வலியுறுத்தி பேசினார். இவரது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக
மேலூரில் இருந்து சென்னைக்கு பஸ் விட உத்தரவிட்டார். அதோடு கடந்த 19-ந்தேதி
முதல்வர் ஜெயலலிதா புதிய பஸ் போக்குவரத்தினை தொடங்கி வைத்தபோது மேலூருக்கும் நவீன
சொகுசு பஸ் வழங்கினார்.
இந்த புதிய பஸ்சை மேலூரில் இருந்து சென்னைக்கு சாமி எம்.எல்.ஏ. கொடி அசைத்து
தொடங்கி வைத்தார். இப்பஸ் தாலுகா அலுவலகம் முன்பு தினசரி இரவு 8.30 மணிக்கு
சென்னைக்கு புறப்பட்டு செல்லும். நவீன வசதிகளுடன் உள்ள இந்த பஸ்சில் சென்னை செல்ல
கட்டணம் ரூ. 305 மட்டுமே. மேலும் இந்த பஸ் கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி ஆகிய
ஊர்களிலும் பயணிகளை ஏற்றி செல்லும். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்
கொள்ளுமாறு சாமி எம்.எல்.ஏ. கூறினார்.
மதுரை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஜபார், நகராட்சி தலைவர் சரவணன், மேலூர்
யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிசெழியன்,
வல்லாளபட்டி சேர்மன் உமாபதி, மாவட்ட கவுன்சிலர் சூரக்குண்டு அம்பலம், மேலூர்
யூனியன் துணைத் தலைவர் முருகன், நகர அவைத்தலைவர் நாகசுப்பிரமணியன், நகராட்சி
முன்னாள் தலைவர் சாகுல்அமீது, தொகுதி இணைசெயலாளர் ஜீவசன்மார்க்கம், மாவட்ட இலக்கிய
அணி தலைவர் மலைச்சாமி, கீழையூர் வேலு, ராமையா, ஒன்றிய அவைத்தலைவர் பிச்சைராஜன்,
அண்ணா தொழிற்சங்க செயலாளர் கயஸ்முகமது, செல்வராஜ், அரசு போக்குவரத்துக் கழக டைம்
கீப்பர் பீர்முகமது மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் ஏராளமான
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சக்தி மாலைமலர்