Friday, October 28, 2011

ஒரு தேசியத்தலைவரை சாதியத்தலைவராக்கிய அரசியல்


படிமம்:PMThevar.gif

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்னவர்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.இவர் ஜாதி தலைவர் இல்லை. அரசியல்வாதிகளில் அப்பழுக்கற்றவர்.

 சுதந்திர போராட்ட வீரர்,


 கடைசிவரை திருமணமே

செய்துகொள்ளாமல் தனது சொத்துக்களை மக்களுக்கே கொடுத்த தியாகி.
இந்து தாய்க்கு பிறந்து, இஸ்லாமிய பெண்ணால் வளர்க்கப்பட்டு, கிறிஸ்தவ பாதிரியார்களால் கல்வி பெற்றவர்.



அடுத்தவரின் பணம் ஒரு ரூபாய்க்கு கூட ஆசைப்படாத ஆன்மீகவாதி. தேசியமும்

தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன அற்புத மனிதர். இப்படிப்பட்ட ஒருவரை

 இந்த தேசியத் தலைவரை சிலர் தங்களின் சுய

லாபத்திற்காக ஜாதித்தலைவராகத் திரித்துவிட்டது வருத்தம் தரும் விஷயமாக

இருக்கிறது.
இன்று குறிப்பிட்ட ஜாதிமக்கள் மட்டுமே  இவரைப்போற்றுகின்றனர்.
உண்மையில்  இவர் எல்லோருக்கும்  பொதுவானதேசியத் தலைவர். 


பசும்பொன் தேவர் 4000 நாட்களை சிறையிலேயே கழித்தார்.
1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர்.















அன்புடன் சக்தி

No comments: