Friday, October 21, 2011

.மழை நீரில் நனையாமல் மக்களைக் காக்கும் சிலை










மர்லின் மன்றோ. உலகம் முழுவதும் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக  வலம் வந்தார்.


ஹாலிவுட் திரையுலகை 1947 முதல் 1962 வரை கலக்கியவர் மர்லின் மன்றோ. உலகம் முழுவதும் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக  வலம் வந்தார். தனது 36-வது வயதில் அவர் மர்மமாக மரணம் அடைந்தார். விஷம் தின்று தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இன்னும் சிலர் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் கிளப்பினர்.
மர்லின் மன்றோ மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான்கென்னடியுடனும் இணைத்து பேசப்பட்டார்  மர்லின் மன்றோவின் 26 அடி உயரமான சிலையொன்று அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் கடந்தஜூலை மாதம்  திறந்துவைக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்தாலான இந்த சிலை 15422 கிலோகிராம் எடையுடையது. சேவார்ட் ஜோன்ஸன் எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கியுள்ளார். 1955 ஆம்ஆண்டு வெளியான த செவன் இயர் இட்ச் எனும் திரைப்படத்தில் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யம் பெற்ற காட்சியொன்றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டுள்ளது. மேற்படி திரைப்படக் காட்சியில் மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை கவுண் கடந்த மாதம் 46 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சிலைஇன்று.மழை நீரில் நனையாமல் மக்களைக் காக்கும் சிலை ஆகிப்போனது 
  
  

அன்புடன் சக்தி

No comments: