Monday, October 10, 2011

இளமைலேயே முதுமை அடைந்த நவீன ஔவையார்

இளமைலேயே முதுமை அடைந்த நவீன ஔவையார்
வயோதிக தோற்றத்திற்கு காரணமே வயதாகுதல் தான். ஆனால் இவருக்கு நடந்த நிகழ்வைப் பார்ப்போம். வியட்நாம் நாட்டை சேர்ந்தவர் 26 வயதான இளம் பெண்மணி Phuong எனும் அழகி.
















இந்த பெண்மணி கடந்த 2008 ம் ஆண்டு கடலுணவு வகைகளை அதிகம் சாப்பிட்டுள்ளார். இதன் பின்னர் இவரது முகம் வீங்கி ஒவ்வாமை நிலைக்கு ஆளாகியுள்ளார்.







இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர் தனது கணவரான 34 வயதான Nguyen Thanh Tuyen என்பவரது உதவியுடன் வைத்திரை நாடியுள்ளார். பின்னர் வைத்திய சிகிச்சைக்காக சென்ற பெண்மணி டாக்டர்களின் ஆலோசனைக்கு அமைய ஒவ்வாமை மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்துள்ளார். உட்கொண்டு பலனளிக்காததால் 2009 ம் ஆண்டு தான்பயன்படுத்திய அனைத்து மருந்துகளையும் நிறுத்திக்கொண்டார்.







ஆனால் அதன் விளைவு தற்போது பெண்ணின் உருவம் 70 வயது கிழவி போன்று மாறிவிட்டது. இதுபற்றி இந்த பெண் கருத்த தெரிவிக்கையில்:- எனக்கு இதுவரை எந்த குழந்தைகளும் இல்லை.



ஆனால் என் முகம் வயதானாலும் வயிறு அதிக குழந்தைகள் பெறக்கூடிய இளமையாகத்தான் இருக்கிறது. மேலும் நான் விகாரம் அடைந்தாலும் என் கணவர் என்னை அன்பாக கவனித்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.

அன்புடன் சக்தி

No comments: