Friday, October 14, 2011

வணக்கம் தோழர்களே...




ஒரு புறம் மக்கள் உணவின்றி சாக... மற்றோர் புறம் கோவில்களில் செல்வங்கள் குவிந்து கிடக்கிறது.



தங்கள் அடிப்படை வசதிகளை கூட பெற்றுக்கொள்ள இயலாமால் தவிக்கும் மக்கள் மத்தியில் சாமிகளுக்கு செல்வங்களை அள்ளி கொடுக்கிறார்கள்



சாமி கும்பிடுகிறேன், பிரசாதம் படைக்கிறேன், மொட்டை அடிக்கிறேன் காணிக்கைகள் செலுத்துகிறேன், தங்கத்தில் சிலை வைக்கிறேன், கோயில் கட்ட நிதி கொடுக்கிறேன், நகைகள் சாத்துகிறேன்....... இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வளவு செய்கிறார்கள் கோயில்களுக்கு (சாமிக்கு) மக்கள். போதாக்குறைக்கு தங்கள் தலைகளில் தேங்காய் உடைக்கிறார்கள்.



இது மட்டுமா? சாமிக்கு மட்டுமில்லாமல் சாமியார்களுக்கு வேறு வாரி வழங்குகிறார்கள். சாமியார்களை தரிசிக்க வேறு வகை வகையாய் கட்டணங்கள். அவருக்கு பாத பூஜை செய்ய தனி கட்டணமாம். பக்கத்தில் சென்று பார்க்க ஒரு கட்டணமாம். தூரத்தில் நின்று பார்க்க ஒரு கட்டணமாம். என்னை கொடுமை இது? கொண்டு போய் கொட்டுகிறார்கள். கண் முன்னே கண்டிருக்கிறேன் இந்த காட்சிகளை எல்லாம். அப்போது எல்லாம் என் மனதில் படிக்க வேண்டிய வயதில் குப்பை பொறுக்கும் சிறுவர்களும், தேநீர் கடைகளில் கோப்பைகளை கழுவும் சிறுவர்களும் தான் வந்தார்கள்.



எதற்காக? சாமிக்கு எதற்காக இத்தனை செய்கிறார்கள்?



அவர்களின் எதாவது ஒரு விருப்பம் நிறைவேறி இருக்கலாம்.

நினைத்தது கிடைத்து இருக்கலாம்.

வசதி பெருகி இருக்கலாம்.

பெருமைக்காக செய்யலாம்.

பயந்து போய் செய்யலாம்.



காரணங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.



ஆனால்,



இதை எல்லாம் விட தன் சக மனிதனின் துயர் துடைக்கலாமே....!



சாமி, கோவில் என செல்வங்களை வழங்குவதை விட கண்முன்னே துயர்படும் மக்களுக்கு கொடுத்து உதவலாமே!



உணவின்றி உயிர் விடும் சக மனிதனுக்கு உதவலாம்.



படிக்க வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக சிறு உதவிகள் செய்யலாம்.



ஆதரவற்ற முதியோர் , குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உதவலாம். அந்த குழந்தைகளை படிக்க வைக்கலாம்.



தானமாக கொடுக்காவிட்டாலும் நான்கு பேருக்கு வருமானம் ஈட்டும் வகையில் ஏதேனும் உதவிகள் செய்யலாம்.



திருந்துவார்களா?

நன்றி
அக்னித் தமிழச்சி
அன்புடன் சக்தி

No comments: