Wednesday, April 04, 2012

உலகின் மிக வயதான பெண் மருத்துவர் மரணம்


உலகின் மிக வயதான பெண் மருத்துவர் லையிலா டென்மார்க், தனது 114 வயதில் மரணமடைந்துள்ளார்.

இவர் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர், கடந்த 1898-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் திகதி பிறந்தார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஆவார்.



இவர் உலகின் மிகவும் வயதானவர்களில் 4-வது நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

மருத்துவரான இவர் அட்லாண்டா மாகாணத்தில் கடந்த 1931-ம் ஆண்டு பயிற்சி மருத்துவராக சேர்ந்து 70 ஆண்டுகள் மருத்துவ சேவை புரிந்து கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் திகதியன்று(ஞாயிறு) இவர் இறந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இவர் இறந்த போது இவருக்கு வயது 113 வருடம் 312 நாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.


அன்புடன்
சக்தி

No comments: