Wednesday, April 04, 2012

98 டன் தண்ணீரை வீணடித்த மூதாட்டி

சீனாவின் லயோனிங் மாகாணம் டாலியன் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிராமத்தில் இருக்கும் அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.


மூதாட்டியின் பெயர் சாங்(68). கடந்த 3 மாதமாக மகன் வீட்டில் இருக்கும் அவர் 5 நிமிடத்துக்கு ஒரு முறை கழிவறைக்கு போய் வந்தது மகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.



சமீபத்தில் இதுபற்றி விசாரித்தார். டாய்லெட்டுல ஒரு பெட்டி(ஃபிளஷ் டேங்க்) இருக்கிறதே. அதன் மேல் இருக்கும் சுவிட்சை அழுத்தினால், குபுக்கென்று தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்கிறது.



இந்த சத்தம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. ஊரில் வாய்க்கால் ஓடுவது போலவே இருக்கிறது. அந்த சத்தத்தை நாள் முழுக்க கேட்க வேண்டும் போல இருந்தது. காசா, பணமா? 5 நிமிடத்துக்கு ஒருமுறை சென்று அழுத்திவிட்டு, அருகிலேயே நின்று தண்ணீர் சத்தத்தை கேட்டுவிட்டு வருவேன் என்றார்.



கிராமத்திலேயே இருந்த அவர் முதல் முறையாக நகருக்கு வந்தவர். ஃபிளஷ் டேங்குடன் கூடிய டாய்லெட்டை அப்போது தான் முதல் முறையாக பார்த்திருக்கிறார் என்று தெரியவந்தது. கடந்த 2 மாதத்தில் 98 டன் தண்ணீரை வீணாக்கிவிட்டார் என்று சீனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அன்புடன்
சக்தி

No comments: