Thursday, April 12, 2012

தண்ணீரில் விளக்கு எரியுமா?
ராசிபுரம் அருகே, 300 ஆண்டுகளுக்கும் மேல் கொண்டாடப்படும் பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரியும் அதிசியநிகழ்ச்சி, பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது.

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டையில், பிரசித்தி பெற்ற பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு விழா, கடந்த 8ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, அன்று இரவு 10 மணிக்கு ஸ்வாமிக்கு பூச்சாட்டுதல் மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, மறுநாள் காலை 9 மணிக்கு சக்தி அழைத்தல், மாலை 4 மணிக்கு அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு, கோவில் கிணற்றில் பூசாரி புனித நீராடி, சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தார். அதை தொடர்ந்து, கோவில் முன் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்தார். பின்னர், கிணற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சைத் தண்ணீரை விளக்கில் ஊற்றி பற்ற வைத்தார். அப்போது, திரி கொழுந்து விட்டு எரிந்தது. இக்காட்சியை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசப்பட்டனர். தொடர்ந்து, ஒன்றரை மணி நேரம் எரியும் விளக்கு காலை 6 மணிக்கு எரிந்து அணைந்துவிடும். இந்நிகழ்ச்சி, ஆண்டு தோறும் ஒருநாள் மட்டும் தொன்று தொட்டு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணிக்கு கிடா வெட்டு நிகழ்ச்சியும், அன்று மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. பச்சைத்தண்ணி மாரியம்மன் ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
இது குறித்து கோவில் பூசாரிகள் வெங்கட், நடேசன் ஆகியோர் கூறியதாவது: பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழா, 300 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் முன்னோர்கள் காலத்தில், ஒரு முறை கோவில் விளக்கில் இருந்து எண்ணெய் தீர்ந்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது ஊர் தர்மகர்த்தாவிடம் சென்று, விளக்குக்கு எண்ணெய் வாங்க பணம் கேட்டனர். அதற்கு அந்த தர்மகர்த்தா, "என்னிடம் காசு இல்லை எனக்கூறியதுடன், சக்தி உள்ள ஸ்வாமி மாரியம்மன் தானே; தண்ணீர் ஊற்றி பற்றவை எரியும்' என, விரக்தியில் கூறினார். அதை தொடர்ந்து, பூசாரிகள் தண்ணீர் ஊற்றி பற்றவைத்தனர். அப்போது தீ சுடர் விட்டு எரிந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அன்று முதல் ஸ்வாமி பச்சைத்தண்ணி மாரியம்மன் என அழைக்கப்படுகிறது. ஸ்வாமிக்கு ஆண்டு தோறும் கோவில் திருவிழாவின் போது, தண்ணீர் ஊற்றி பற்றவைத்து வழிபாடு நடத்துவது, தொன்று தொட்டு நடந்து வருகிறது. அதன் கிளை கோவில், சேலம் ஐந்து ரோட்டிலும், மும்பையிலும் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அன்புடன்
சக்தி

Wednesday, April 11, 2012

தமிழீழ பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா ?


உலக அளவில் வாழும் எம் தமிழ் மக்கள்

அருள்கூர்ந்து இந்தப் பதிவினைச் செய்யுங்கள்
இது தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தத்
தூண்டுதலாக இருக்கும்.

உங்கள் பதிவினை இன்றே செய்யுங்கள்
கீழுள்ள இணைப்பினைச் சொடுக்கி வாக்களியுங்கள்
தமிழீழ பொது வாக்கெடுப்பு
நண்பர்களுக்கும் அனுப்பவும்.
அன்புடன்
சக்தி

Friday, April 06, 2012

இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்

ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும் திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து பருகவேண்டும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் அதிகரிக்காது. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.




அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.



சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.



ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.



திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.



அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்
அன்புடன்                                                                                                    நன்றி தினகரன்
சக்தி

மிதக்கும் திரைஅரங்கம் [floating cinema]



மிதக்கும் திரைஅரங்கம்
 தாய்லாந்நாட்டில் கடலில் சுற்றிலும் மலைகள்   சூழ்ந்த இடத்தில் மிதக்கும் திரைஅரங்கம் ஒன்றை அமைத்துள்ளனர்.இந்த திரைஅரங்கத்தைச் சுற்றி மலைகள் அமைந்துள்ளத்தால் கடலலைகள் இல்லாமல் அமைதியாக படம் பார்க்கமுடியும்.










அன்புடன்
சக்தி

மனைவியை கத்தி முனையில் மிரட்டிய கணவன்


தாய்லாந்தில் சாக்டவுட் ஹாம்சிரி(Sakdawut Hamsiri) என்ற நபர் தனது மனைவியை பாங்காக் என்னும் இடத்தில் ஆறு மணிநேரமாக கழுத்தில் கத்தியை வைத்து அவரது மனைவியை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.











தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெகு நேரம் போராடி அவரது மனைவிவை காப்பாற்றியுள்ளனர். இதனை பார்த்த பொது மக்கள் செய்வதறியாது திகைத்த நிலையில் இந்த காட்சியைக் கண்டனர்.






சிரு காயங்களுடன் இவரது மனைவி உயிர்தப்பியுள்ளார். சாக்டவுட் ஹாம்சிரி(Sakdawut Hamsiri)யை கைது செய்த பொலிசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தினர். விசாரனையில் இவர் போதை மருந்து அருந்தியதாக தெரியவந்துள்ளது






Wednesday, April 04, 2012

98 டன் தண்ணீரை வீணடித்த மூதாட்டி

சீனாவின் லயோனிங் மாகாணம் டாலியன் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிராமத்தில் இருக்கும் அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.


மூதாட்டியின் பெயர் சாங்(68). கடந்த 3 மாதமாக மகன் வீட்டில் இருக்கும் அவர் 5 நிமிடத்துக்கு ஒரு முறை கழிவறைக்கு போய் வந்தது மகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.



சமீபத்தில் இதுபற்றி விசாரித்தார். டாய்லெட்டுல ஒரு பெட்டி(ஃபிளஷ் டேங்க்) இருக்கிறதே. அதன் மேல் இருக்கும் சுவிட்சை அழுத்தினால், குபுக்கென்று தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்கிறது.



இந்த சத்தம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. ஊரில் வாய்க்கால் ஓடுவது போலவே இருக்கிறது. அந்த சத்தத்தை நாள் முழுக்க கேட்க வேண்டும் போல இருந்தது. காசா, பணமா? 5 நிமிடத்துக்கு ஒருமுறை சென்று அழுத்திவிட்டு, அருகிலேயே நின்று தண்ணீர் சத்தத்தை கேட்டுவிட்டு வருவேன் என்றார்.



கிராமத்திலேயே இருந்த அவர் முதல் முறையாக நகருக்கு வந்தவர். ஃபிளஷ் டேங்குடன் கூடிய டாய்லெட்டை அப்போது தான் முதல் முறையாக பார்த்திருக்கிறார் என்று தெரியவந்தது. கடந்த 2 மாதத்தில் 98 டன் தண்ணீரை வீணாக்கிவிட்டார் என்று சீனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அன்புடன்
சக்தி

உலகின் மிக வயதான பெண் மருத்துவர் மரணம்


உலகின் மிக வயதான பெண் மருத்துவர் லையிலா டென்மார்க், தனது 114 வயதில் மரணமடைந்துள்ளார்.

இவர் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர், கடந்த 1898-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் திகதி பிறந்தார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஆவார்.



இவர் உலகின் மிகவும் வயதானவர்களில் 4-வது நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

மருத்துவரான இவர் அட்லாண்டா மாகாணத்தில் கடந்த 1931-ம் ஆண்டு பயிற்சி மருத்துவராக சேர்ந்து 70 ஆண்டுகள் மருத்துவ சேவை புரிந்து கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் திகதியன்று(ஞாயிறு) இவர் இறந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இவர் இறந்த போது இவருக்கு வயது 113 வருடம் 312 நாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.


அன்புடன்
சக்தி

Sunday, April 01, 2012

பாம்பிடம் விளையாடும் சிறுவர்கள்

பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். இங்கு ஒரு சிறுவனைக் கண்டு பாம்பு நடுங்குவதைப்பாருங்கள்.பயமின்றி பாம்பிடம் விளையாடும் சிறுவர்கலைபார்த்தால் பார்ப்பவர்களுக்குத்தான் பயம் வரும்.
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியை விட்டு ஒரு மணி தூரப் பயணத்தில் ஃபரிதாபாத் என்ற கிராமத்தில் வசிக்கும் புத் நாத்(65) என்பவர் பாரம் பரியமாக பாம்பு பிடித்து வித்தை காட்டி வாழ்பவர்.



இவர் பாம்பு பிடிக்கும் பேடியா இனத்தை சேர்ந்த இவர் தன்னுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தாலும் பாம்பு பிடிக்கும் வித்தையை கற்றுக் கொடுக்கத் தவறுவதில்லை.

தனது 2 வயது பேரன் சுமித்துக்கு பாம்பு வித்தைகளைக் கற்றுத் தரும் இவரின் பிள்ளைகள் பாம்புகளை உடல் மீது படரவிட்டு விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டனர்.




பள்ளிக் கூடத்துக்குப் போவதை விட பாம்புகளுடன் இருக்கவே அதிகம் விரும்புகின்றனர்.


























அன்புடன் சக்தி