நம்ம ஊரில்தான் அரசியல் கட்சிகலின் போராட்டத்தின் போது
தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வார்கள்
என்று நினைக்கவேண்டாம். வட கிரீஸில் அரசாங்கம் வங்கிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 55 வயது நபரொருவர் தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்
.
தெஸ்ஸாலோனிகி எனும் இடத்திலுள்ள வங்கியொன்றின் கிளைக்கு வெளியே தீக்குளித்த மேற்படி நபரின் உடலில் பரவிய தீயை அங்கிருந்த பொலிசார் துரிதமாக செயற்பட்டு அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மார்புப் பகுதியில் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அந்த நபர் காணப்படுகிறார் நிதிப் பிரச்சினை காரணமாக மேற்படி நபர் ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்ள முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.
தன்னையே தீ வைத்துக் கொள்வதால் இவர்களுக்கு என்ன கிடைக்கும்
இறைவன் கொடுத்த உயிரை மாய்த்துக்கொள்ள இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
No comments:
Post a Comment