Wednesday, September 14, 2011

உலகின் மிக பெரிய முதலையை உயிருடன் பிடித்த கிராமத்தினர்

.
உலகின் மிகப் பெரிய முதலையாக கருதப்படும் முதலையை பிலிபைன்சை சேர்ந்த 100 பேர் சேர்ந்து பிடித்துள்ளனர்.









 
இந்த முதலை 21 அடி நீளமும் ஒரு டன் எடையும் கொண்டுள்ளது.


இந்த முதலை ஒரு மீனவரை உண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
அண்மைய வருடங்களில் உயிரோடு பிடிக்கப்பட்ட மிகப்பெரிய முதலையாக இதுவே உள்ளது.
20 வருடங்களாக அச்சத்தில் வாழ்ந்த அக்கிராம மக்களால்  மூன்றுநாள் போராட்டத்தின் பின்னர் இது பிடிபட்டுள்ளது. மனிலாவிலிருந்து தென்கிழக்காக 500 மைல் தொலைவிலுள்ள அகுசான் கிராமத்தின் ஆற்றிலேயே இது வாழ்ந்து வந்தது


ஒரு மீனவர் காணாமற்போனதிலிருந்து இதை அவதானித்துவந்த அப்பகுதிவாழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பின்தொடர்ந்து இதைப் பிடித்துள்ளனர்.





 

 

No comments: