Wednesday, September 28, 2011

டீயை குடியுங்கள்-பற்களில் காரை படிவதை டீ தடுக்கிறது

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு. டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால்
உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.
சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது.



எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.



வயிற்றுவலி(அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.



டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.



வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ”ப்ளேவோனாய்ட்ஸ்” தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.



டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.



மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.



டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.



இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்,“மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.



உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.




அன்புடன் சக்தி

Sunday, September 25, 2011

அதிசைய சிறுவன்-இச்சிறுவனின் புகைப்படத்தைப்பாருங்கள்



 எட்டு வயது தீபக் குமார் என்ற சிறுவனின் 
 மார்பில் இருந்து கால்கள் மற்றும் கைகள் வளர்ந்துவந்துள்ளது .குழந்தையாக இருக்கும்போது 
 அறுவை சிக்கிசை செய்ய முடியாதநிலையில் 
தற்பொழுது  பெங்களூரில் உள்ள மருத்துவமனையில்  http://svrsakthi.blogspot.com/
அறுவை சிக்கிசை முடிந்து நலமுடன் இருக்கிறான்
சிலர் இச்சிறுவனை  கடவுள் அவதாரமாக கருதினர் . 

இச்சிறுவனின் புகைப்படத்தைப்பாருங்கள்








                                                         

                                                       சிகிச்சைக்குப்பின்  
                     


                                                      


Saturday, September 24, 2011

பிரான்ஸ்சில்பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு அபராதம்

. பிரான்ஸ்சில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை முழுவதுமாக மறைக்கும் பர்தா அணிய கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் தீவிரவாதம் அதிகரித்துள்ள நிலையில்.பர்தாவை தவறாக பயன்படுத்த கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டு வரப்பட்டது.


 

மத வழக்கங்களுக்கு தடை விதித்ததால் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தடையை மீறி மீயக்ஸ் நகரில் பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் நேற்று அபராதம் விதித்தது.

ஹிந்த் அமாஸ் (32) என்ற பெண்ணுக்கு 120 யூரோவும், நஜாத் நய்த் அலி (36) என்ற பெண்ணுக்கு 80 யூரோவும் அபராதம் விதிக்கப்பட்டது..







அபராதத் தொகை ஒரு பிரச்னையே அல்ல. ஆனால், எங்கள் மதவழக்கங்களை பின்பற்றுவதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது இதை எதிர்த்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக இவர்கள் கூறியுள்ளனர். பிரான்ஸ் தவிர பெல்ஜியம், இத்தாலியின் சில நகரங்களிலும் பர்தாவுக்கு தடை உள்ளது.











 
அன்புடன் சக்தி

Monday, September 19, 2011

துபாய் விமான நிலையத்தில்- 'இ-கேட்'

துபாய் விமான நிலையத்தில் குடியுரிமை பரிசோதனைகளுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்துக் கிடப்பதைத் தவிர்க்கும் வகையில் 'இ-கேட்' என்ற புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் பயணிகள் மொத்தம் 14 வினாடிகளில் தங்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட பரிசோதனைகளை முடித்துக் கொள்ள முடியும்.துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏ 380 ரக பெரிய விமானங்கள் வந்து நிற்பதற்கான பன்னாட்டு முனையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானம் முடிந்த பின் துபாய்க்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்பது கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விமான நிலையத்தில் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை விரைவில் மேற்கொள்ள 'இ-கேட்' என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நுழைவாயிலில் 'பாஸ்போர்ட்' டை பரிசோதிக்கும் ஸ்கேனர் பயணியைச் சோதிக்கும் ஒரு கேமரா பயணியின் கண் கருவிழியைச் சோதிக்கும் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகள் இருக்கும்.
இவற்றின் மூலம் ஒட்டுமொத்த பரிசோதனையும் 14 வினாடிகளில் முடிந்து விடும். இதன் மூலம் பயணிகள் விமான நிலையத்தில் குவிவதை குறைக்க முடியும். இத்திட்டம் ஏற்கனவே அபுதாபியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்ளும் மனிதன்

நம்ம ஊரில்தான் அரசியல் கட்சிகலின் போராட்டத்தின் போது
தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வார்கள்
என்று நினைக்கவேண்டாம். வட கிரீஸில் அரசாங்கம் வங்கிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 55 வயது நபரொருவர் தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்


.

 தெஸ்ஸாலோனிகி எனும் இடத்திலுள்ள வங்கியொன்றின் கிளைக்கு வெளியே தீக்குளித்த மேற்படி நபரின் உடலில் பரவிய தீயை அங்கிருந்த பொலிசார் துரிதமாக செயற்பட்டு அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


 




மார்புப் பகுதியில் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அந்த நபர் காணப்படுகிறார் நிதிப் பிரச்சினை காரணமாக மேற்படி நபர் ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்ள முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.




தன்னையே தீ வைத்துக் கொள்வதால் இவர்களுக்கு என்ன கிடைக்கும்
இறைவன் கொடுத்த உயிரை மாய்த்துக்கொள்ள இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.  

Saturday, September 17, 2011

புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து

உலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்தை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

. 'ஸ்மார்ட் பாம்' என்று பெயரிட்டுள்ள இந்த மருந்து அனைத்து வகை கேன்சர்களையும் குணப்படுத்தும் என தெரிவித்துள்ளனர்



'கோல்சிசைன்' என்ற இந்த மருத்துவமுறை முதலில் எலிகளுக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கபட்டது. இந்த பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளதாகவும் இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு சோதிக்கப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



'ஆன்டம் குரோகஸ்' என்ற ஒருவகை மலரில் இருந்து இந்த மருந்தின் மூலபொருள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழித்துவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வேறு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

மனிதர்களுக்கு அளிக்கப்படும் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மருந்து இன்னும் 7 ஆண்டுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

Friday, September 16, 2011

குரங்குமனிதன் (வீடியோ இணைப்பு)





குரங்குமனிதன்


 இந்தியாவின் லக்னவ் பகுதியின் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மிகப்பெரும் இடைஞ்சல்களை அங்குள்ள கட்டிடத்தொகுதிக்குள் வாழும் ஏராளமான குரங்குகள் மேற்கொண்டு வந்தன.



இது மாத்திரம் இன்றி ரயிலில் பயணிக்க வரும் பயணிகளை அவை தாக்குவதோடு அவர்களின் உடமைகளையும் பறிமுதல் செய்கின்றன. எனவே பயணிகளின் நன்மை கருதிய லக்னவ் ரயில்வே தலைமை அதிகாரிகள் இதெற்கென ஒருவரை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.



அவரது பெயர் அச்சான் மியான்(வயது 42). அவர் அச்சு அசல் குரங்குபோலவே வீதியால் நடந்து வந்து அங்குள்ள ஆயிரக்கணக்கான குரங்குகளை பயமுறுத்தி அவற்றை துரத்தி வருகிறார்.

இவரது செய்கைகள் அனைத்தும் குரங்குகலைப் போலவே உள்ளது.



அன்புடன் சக்தி

Thursday, September 15, 2011

மகாபாரதம் உண்மைதானா?

மகாபாரதத்தில் கண்ணனின் புல்லங்குழல் இசை கேட்டு மாடுகள் அவன் பின்னால் செல்வதாக நாம் படித்ததுண்டு கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு பசுக்கள் மயங்கின.
இன்று பசுக்களை மயக்கும் நவீன கண்ணன்கள் நீங்கள் பார்த்ததுண்டா கிழே உள்ள விடியோவைப் பார்க்கவும்   



ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த ஆபிரிக்க - அமெரிக்க சமூகத்தினரிடையே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான இசை வடிவத்தின் பெயர் ஜாஸ்.



ஆபிரிக்க இசை மரபுகளினதும் ஐரோப்பிய இசை மரபுகளினதும் கலப்பில் உருவானது. ஜாஸ் இசைக்கு பசுக்கள் மயங்குவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அன்று கண்ணனின் புல்லங்குழல் இசை கேட்டு மாடுகள்
மயங்கியது உண்மைதானா?
மகாபாரதம் உண்மைதானா?




சூர்யாவின் மறுபக்கம் (வீடியோ இணைப்பு)




சூர்யா,முன்னணி கதாநாயகன்,இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்
ஆனால் எத்தனை பேருக்குத்தெரியும் அவர் நடத்தும் அகரம் பவுண்டேஷன்

.நான் அவர்  படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று
சொல்லவரவில்லை.
வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.என்று சூர்யா
கூறுவதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண்-9841091000.






 

அன்புடன்
சக்தி








Wednesday, September 14, 2011

உலகின் மிக பெரிய முதலையை உயிருடன் பிடித்த கிராமத்தினர்

.
உலகின் மிகப் பெரிய முதலையாக கருதப்படும் முதலையை பிலிபைன்சை சேர்ந்த 100 பேர் சேர்ந்து பிடித்துள்ளனர்.









 
இந்த முதலை 21 அடி நீளமும் ஒரு டன் எடையும் கொண்டுள்ளது.


இந்த முதலை ஒரு மீனவரை உண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
அண்மைய வருடங்களில் உயிரோடு பிடிக்கப்பட்ட மிகப்பெரிய முதலையாக இதுவே உள்ளது.
20 வருடங்களாக அச்சத்தில் வாழ்ந்த அக்கிராம மக்களால்  மூன்றுநாள் போராட்டத்தின் பின்னர் இது பிடிபட்டுள்ளது. மனிலாவிலிருந்து தென்கிழக்காக 500 மைல் தொலைவிலுள்ள அகுசான் கிராமத்தின் ஆற்றிலேயே இது வாழ்ந்து வந்தது


ஒரு மீனவர் காணாமற்போனதிலிருந்து இதை அவதானித்துவந்த அப்பகுதிவாழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பின்தொடர்ந்து இதைப் பிடித்துள்ளனர்.





 

 

Wednesday, September 07, 2011

உலகின் மிக பெரிய சிற்பம்-கிரேஸி ஹார்ஸ் புகைப்படங்கள்

 உலகின் மிக பெரிய சிற்பம்-கிரேஸி ஹார்ஸ் நினைவுச்சின்னம்




அமெரிக்காவில்  தெற்கு டகோட்டா அருகில் பிளாக் ஹில்ஸ் மலை மீது செதுக்கப்பட்ட  தேசிய நினைவு பாரம்பரியம் உள்ள, ஒரு  நினைவுச்சின்னம் 1948 - ல் தொடங்கி இன்னும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.இது நிதி  பிரச்னைகாரணமாக முடிவடையாமல் உள்ளது.இது முடியும் பொழுது  641 அடி (195 மீ) அகலம் மற்றும் 563 அடி (172 மீ) -இருக்கும்






 கிரேஸி ஹார்ஸ் கல்லறை

அது கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்இந்தியனை நினைவுகூர்வதாக இருக்கிறது.இவர்  அமெரிக்கர்களுக்கும்  செவ்இந்தியர்களுக்கும் டிசம்பர் 21, 1866 -ல்   நடந்த  போரில் செவ்இந்தியர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் .     


Friday, September 02, 2011

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

 உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது


ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 


உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறைய ஒற்றுமையோடு  விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்கள்  நடைபெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்
சக்தி