Wednesday, July 27, 2011

சிங்கம்புணரியில்-பெரிதாகி வரும் சிறுவனின் வயிறு:ஆப்பரேஷனுக்கு நிதியின்றி தவிப்பு

சிவகங்கை,: சிங்கம்புணரியில் பிறந்த உடன் குடல் வெளியே தெரிந்த சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, அவனது தாய் தவித்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் மணிசர்மா(4). இவர், சிங்கம்புணரியில் உள்ள தனியார் கிளினிக்கில் பிறந்தபோது தோல் மென்மையாக இருந்துள்ளது. இதனால், வயிற்றுக்குள் இருந்த குடல் வெளியே தெரிந்துள்ளது. நாளைடைவில், இவரது குடல் பெருத்து வயிறு வீங்கியது. பயந்துபோன வனிதா, மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனின் 2 வயதில் ஆப்பரேஷன் செய்துள்ளனர். மீண்டும், சிறுவனின் வயிறு பெருத்துக்கொண்டே இருந்தது.




இரண்டாவது முறையாக ஆப்பரேஷன் செய்யவேண்டும்; இதற்கு 2 லட்ச ரூபாய் வரை செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏழை சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, வனிதா தவிக்கிறார். இது குறித்து வனிதா கூறுகையில்,"" எனது மகனின் நிலையை பார்த்து, என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். இதனால், குடும்பம் நடத்த வசதியின்றி, கயிறு திரிக்கும் தொழிலுக்கு வந்தேன். தினமும் 100 ரூபாய் சம்பாதித்து, குடும்பம் நடத்துகிறேன். எனது மகனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி தவிக்கிறேன்,'' என்றார்.
உதவ விரும்புவோர், 96261 - 08933-ல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி
தினமலர்



No comments: