Friday, July 15, 2011

பாக்கிஸ்தானையும் இந்தியாவையும் இணைத்த இதயம்

சென்னை: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவித பிரச்சனை இருந்தாலும், ஒரு பாகிஸ்தானியரின் இதயம் மட்டும் இந்தியாவை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. காரணம்,அவருக்குப் பொருத்தப்பட்டிருப்பது இந்தியர் ஒருவரின் இதயம்.


 இதயம் தானம் கொடுத்தவர் இந்தியாவை சேர்ந்த இந்து, அதை பெற்றவர் முஸ்லிம், அதை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பிரசாந்த் என்பவர் கிறிஸ்தவர். 


பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரியாஸ் முகமது (54). தனது குடும்பத்தாருடன் துபாயில் வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 23-ம் தேதி இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். அவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் இதய நோய் தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே, விபத்தில் பலத்தகாயம் அடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட, திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி, 33, என்பவர் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் இருந்த பாலாஜியின் உடலில் இருந்து இதயத்தை பிரித்தெடுத்து, முகப்பேர் பிராண்டியர் லைன் மருத்துவமனையில் உள்ள முகமது ரியாசுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த 10-ம் தேதி சென்னையில் உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இது சுமார் 6 மணி நேரம் நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்போது ரியாஸ் குணமடைந்து வருகிறார். இன்னும் 15 நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்யப் போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் பாகிஸ்தானியர்களாக இருந்தாலும், எங்களை அன்போடு கவனித்துக் கொள்கின்றனர் என்று ரியாஸின் மகள் ஹசீனா குரல் தழுதழுக்கக் கூறினார். ரியாஸின் மனைவி தமிழர்களின் பாசத்தைப் பார்த்துவிட்டு நெகிழிந்து போயுள்ளார்

  •  

1 comment:

Anonymous said...

good news