Sunday, July 31, 2011

சிலந்தியிடம் சிக்கிய பாம்பு (புகைப்படத்துடன்)

சிலந்தியிடம் சிக்கிய பாம்பு

 பாம்பென்றால் எல்லோருக்கம் பயம் தோன்றுவது இயல்பு  
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.
ஆனால் இங்கு  சிலந்தியிடம் சிக்கிய
பாம்பின் நிலைமையை பாருங்கள்

 
شکار مار


شکار مار


شکار مار


شکار مار
 உங்களின் கருத்துக்களை எழுதுங்கள்  

Saturday, July 30, 2011

தந்தையை கொன்றவரை தனி ஒரு நபராகதேடி கண்டுபிடித்து தண்டனைவாங்கி கொடுத்த ராஜாமுகமது



மேலூர்: ரோட்டை கடந்தவரை காரை ஏற்றி கொன்று விட்டு தப்பிய நபரை, தனி ஒரு நபராக மூன்று மாதம் தேடி கண்டுபிடித்து, மேலூர் கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுத்தார் இறந்து போனவரின் மகன். மதுரை மேலூர் அருகில் உள்ளது தும்பைப்பட்டி ஊராட்சி. இவ்வூரைச் சேர்ந்த மீராலெப்பை, 55. சென்னை புரசைவாக்கத்தில் ரெடிமேட் கடை நடத்தி வந்தார். விடுமுறையில் தும்பைபட்டிக்கு வந்த அவர், 2011 ஏப்.,17ம் தேதி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள, பெரியகுளம் கண்மாய்க்கு குளிக்க சென்றார். காலை 8.30 மணிக்கு ரோட்டை கடந்தார். அப்போது திருச்சியை நோக்கி சென்ற கிரே கலர் இண்டிகா கார், மீராலெப்பை மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். மோதிய வேகத்தில், காரின் முன்பக்க இண்டிகேட்டர் உடைந்து அந்த இடத்தில் கிடக்க, கார் நிற்காமல் சென்றது. அவ்விடத்திற்கு வந்த மீராலெப்பையின் மகன் ராஜாமுகமது, 35, அருகில் இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். யாரும் காரின் எண்ணை கவனிக்கவில்லை என தெரிந்தது. போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து என, வழக்கை முடிக்க முயன்றனர்.

அதில் உடன்பாடு ஏற்படாத ராஜாமுகமது, கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.
ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்கு அலைந்து பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார். இத்தகவலை மேலூர் போலீசாரிடம் அவர் தெரிவிக்க, ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மாடசாமி, டிரைவரை கோர்ட்டில் ரிமாண்ட் செய்தார். திருப்பூரில் டெய்லர் வேலை பார்த்து, தனது குடும்பத்தை காப்பாற்றும் ராஜாமுகமது, மூன்று மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு இந்த நீண்ட தேடலை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் மரியம் பிச்சை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடிக்க, ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். ஆனால், தனி ஒரு நபராக போராடி வெற்றி பெற்ற ராஜாமுகமதை பாராட்டத்தான் வேண்டும்.

Thursday, July 28, 2011

சவுதி அரேபியாவில் மண் நீர்வீழ்ச்சி (வீடியோ)

சவுதி அரேபியாவில் உள்ள Al-Ahsae என்ற நகரத்தில் தீடிரென தரையிலிருந்து 9 மீற்றர் உயரத்தில் மண் நீர்வீழ்ச்சி போல மேல் எழும்பியது. புவியில் எற்பட்ட இந்த சம்பவத்தை பார்த்த புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் கூட இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று விளக்கம் கூற முடியவில்லை இதை வீடியோ படம் பார்க்க இங்கே கிளிக்கவும்







 sand fountain-in-Saudi-Arabia
.
sand fountain

Wednesday, July 27, 2011

சிங்கம்புணரியில்-பெரிதாகி வரும் சிறுவனின் வயிறு:ஆப்பரேஷனுக்கு நிதியின்றி தவிப்பு

சிவகங்கை,: சிங்கம்புணரியில் பிறந்த உடன் குடல் வெளியே தெரிந்த சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, அவனது தாய் தவித்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் மணிசர்மா(4). இவர், சிங்கம்புணரியில் உள்ள தனியார் கிளினிக்கில் பிறந்தபோது தோல் மென்மையாக இருந்துள்ளது. இதனால், வயிற்றுக்குள் இருந்த குடல் வெளியே தெரிந்துள்ளது. நாளைடைவில், இவரது குடல் பெருத்து வயிறு வீங்கியது. பயந்துபோன வனிதா, மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனின் 2 வயதில் ஆப்பரேஷன் செய்துள்ளனர். மீண்டும், சிறுவனின் வயிறு பெருத்துக்கொண்டே இருந்தது.




இரண்டாவது முறையாக ஆப்பரேஷன் செய்யவேண்டும்; இதற்கு 2 லட்ச ரூபாய் வரை செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏழை சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, வனிதா தவிக்கிறார். இது குறித்து வனிதா கூறுகையில்,"" எனது மகனின் நிலையை பார்த்து, என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். இதனால், குடும்பம் நடத்த வசதியின்றி, கயிறு திரிக்கும் தொழிலுக்கு வந்தேன். தினமும் 100 ரூபாய் சம்பாதித்து, குடும்பம் நடத்துகிறேன். எனது மகனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி தவிக்கிறேன்,'' என்றார்.
உதவ விரும்புவோர், 96261 - 08933-ல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி
தினமலர்



Tuesday, July 26, 2011

பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள்

 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த   (Shri Varun Dev Mandir )வருணன் கோவில்

Hindu Temple in Pakistan
File:Hindu temple malot jhelum district.jpg




கிருஷ்ணன் கோவில் இடம் லாகூர் 










கராச்சியில் உள்ள காளிகோவில்



இந்துக்களுக்கு மட்டும் வணங்க அனுமதிக்கப்படும் கோவில்


நாராயணன் கோவில்



A worker at the Hindu crematorium outside Karachi with the ashes waiting to be collected by relatives in இந்தியா

A Hindu temple in Karachi's posh Clifton area, Pakistan. (Hindus in Karachi - 2)

Hinglaj Temple

Hindu Temple, Rohtas Fort, near Islamabad, Punjab


Hindu Temple, Mari-Indus, near Kalabagh, Punjab


Photo credit


Hindu Temple, Rawalpindi, Punjab



Hinglaj Mandir or Nani Mandir, Hingol National Park, Baluchistan
பாக்கிஸ்தானில் உள்ள பல கோவில்கள் சேதமடைதுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானின் தற்ப்போதைய அரசு  பாக்.,கில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்களில் ஒருபகுதியாக, லாகூர், கராச்சி உட்பட முக்கிய நகரங்களில் உள்ள 10 கோவில்கள் பாக்., அரசின் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. பல லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் நேற்று முடிவடைந்தன. இதன்மூலம், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது பாராட்டப்பட வேண்டிய செய்தி. பாக்கிஸ்தானில்  இதுபோன்று பல திட்டங்கள் தொடரட்டும்

Sunday, July 17, 2011

Friday, July 15, 2011

பாக்கிஸ்தானையும் இந்தியாவையும் இணைத்த இதயம்

சென்னை: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவித பிரச்சனை இருந்தாலும், ஒரு பாகிஸ்தானியரின் இதயம் மட்டும் இந்தியாவை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. காரணம்,அவருக்குப் பொருத்தப்பட்டிருப்பது இந்தியர் ஒருவரின் இதயம்.


 இதயம் தானம் கொடுத்தவர் இந்தியாவை சேர்ந்த இந்து, அதை பெற்றவர் முஸ்லிம், அதை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பிரசாந்த் என்பவர் கிறிஸ்தவர். 


பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரியாஸ் முகமது (54). தனது குடும்பத்தாருடன் துபாயில் வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 23-ம் தேதி இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். அவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் இதய நோய் தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே, விபத்தில் பலத்தகாயம் அடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட, திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி, 33, என்பவர் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் இருந்த பாலாஜியின் உடலில் இருந்து இதயத்தை பிரித்தெடுத்து, முகப்பேர் பிராண்டியர் லைன் மருத்துவமனையில் உள்ள முகமது ரியாசுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த 10-ம் தேதி சென்னையில் உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இது சுமார் 6 மணி நேரம் நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்போது ரியாஸ் குணமடைந்து வருகிறார். இன்னும் 15 நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்யப் போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் பாகிஸ்தானியர்களாக இருந்தாலும், எங்களை அன்போடு கவனித்துக் கொள்கின்றனர் என்று ரியாஸின் மகள் ஹசீனா குரல் தழுதழுக்கக் கூறினார். ரியாஸின் மனைவி தமிழர்களின் பாசத்தைப் பார்த்துவிட்டு நெகிழிந்து போயுள்ளார்

  •  

Friday, July 01, 2011

உலகின் மிக உயரமான கட்டிடத்தில் மிகப்பெரிய புத்தகம்

துபாயில்  உலகின்
மிக
உயரமான கட்டிடம்  (
burj khalifa)
The Burj-Khalifa

 

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான Burij கட்டிடத்தில் தான் இந்த உலகின் மிகப்பெரிய புத்தகம் உள்ளது. 16 அடி உயரமுள்ள இந்த புத்தகம் பட்டு நூல் காகிதத்தினால் செய்யப்பட்டதாகும். இந்த புத்தகத்தில் உயரமான கட்டிடத்தை உருவாக்க உழைத்த 100 பேரை பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்க ரூபாய் 5.2 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
Image: Burj Khalifa
Image: The base of Burj Khalifa from the Dubai Mall lagoon