Saturday, February 23, 2013

மேலூர் அருகே 1000 பேர்களுக்கு விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியன் அட்டப்பட்டி ஊராட்சியில் 1000 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்களை ஆர்.சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.


இவ்விழாவில் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், வைஸ் சேர்மன் குலோத்துங்கன், திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர் பாலசுப்பிரமணி, மேலூர் தாசில்தார் வசந்தா ஜுலியட் அட்டப்பட்டி ராஜா முகமது, கொட்டாம்பட்டி ஒன்றிய துணை செயலாளர் முத்தலீபு, தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, மாவட்ட கவுன்சிலர் குமாரதேவி சன்மார்க்கம், ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம், கரிகாலன், மனோகரன், பூங்கொடி மணவாளன், ரகமத்துல்லா,

மேலூர் அருகே 1000 பேர்களுக்கு விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்ஊராட்சி துணை தலைவர் சீதாலெட்சுமி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கந்தன், பாலா, பக்குருதீன், வார்டு உறுப்பினர்கள் அபிமன்னன், கவிதா, நாகூர், முத்துலெட்சுமி, லதா, கல்யாணசுந்தரம், பாரதி திலகம், மூக்கம்மாள், அட்டப்பட்டி ஊராட்சி செயலாளர் கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அன்புடன்                                                       நன்றி; மாலைமலர்

 சக்தி

துபாயில் அஜீத்


கடந்த சில நாட்களாக துபாயில் தலைப்பிடப்படாத புதிய படத்திற்காக
அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் டுகாட்டி டயாவெல் பைக்கை சினிமாவிற்காக ஓட்டியிருக்கிறார்.இந்தியாவில் ரேஸ் பைக், கார் ஓட்டத் தெரிந்த ஒரு சில நடிகர்களில் அஜீத் முதன்மையாக அறியப்படுபவர். பிற நடிகர்களைவிட ரேஸ்களில் பங்கேற்பதில் அதீத வெறி கொண்டவர்.

 ரேஸ்களில் பங்கேற்பத்தை அஜீத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் கூறியதற்கு பளார் கொடுத்த அளவுக்கு வார்த்தையால் பதிலடி கொடுத்தவர் அஜீத். இதன்மூலம் அவருக்கு ரேஸ் ஓட்டுவதில் இருக்கும் வெறி அப்பட்டமாக தெரியும்.அதே சமயத்தில் அவரது ரசிகர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளக்கூடியவர்.



கார், பைக் மட்டுமல்ல அதிவேக எந்திர படகுகளையும் லாவகமாக இயக்கத் தெரிந்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிகளில் தீவிர முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார். அஜீத் வசம் சொந்தமாக நின்ஜா உள்ளிட்ட சூப்பர் பைக்குகள் இருக்கின்றன.


அன்புடன்
 சக்தி

Thursday, January 24, 2013

மலேஷியாவில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டது.

கமல்ஹாசன் நடிப்பிலும் இயக்கத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களைத் தீவிர வாதிகளாகச் சித்தரிக்கிறது என்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேஷியாவில் அப்படம் இன்று வெளியாகியுள்ளது.


மலேஷியாவில் அரங்கு நிறைந்த முதல் காட்சி வெற்றியை படம் கண்டுள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மலேஷியாவை அடுத்துள்ள சிங்கப்பூரிலும் மாலைக்காட்சிகளில் படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது/
இந்தப் படத்தை த‌ணிக்கை செய்த மலேஷிய தணிக்கை வாரிய உறுப்பினர் தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதித்த தணிக்கை வாரிய ஆய்வாளரும் முஸ்லிம் பெயருடையவரே என்றும், படத்தில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கு எதிராகவும் எதுவும் இல்லை என்று கூறினார்.
முன்னதாக, சிங்கப்பூர் தணிக்கை வாரியம் இப்படத்தை அனுமதிப்பது பற்றி இந்தியாவின் கருத்தை எதிர்நோக்கியிருந்தது.
அன்புடன் சக்தி

கருப்புச்சாமியின் அதிசய நீருற்று

மேலூர், : கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்குடியில் கிடைத்திருக்கும் அதிசய நீருற்று 18 பட்டி கிராம மக்களின் வறட்சியை போக்கும் அட்சய பாத்திரமா விளங்குகிறது.


கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிரயான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பால்குடி கிராமம். இங்குஅறிவி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் உள்ள கருப்பர் கோயில் அருகில் தரையில் ஒரு ஆடி ஆழத்தில் ஒரு அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இப் பள்ளத்திலிருந்து ஊற்று தண்ணீர் வற்றாமல் வந்துகொண்டே இருக்கிறது. கடுமையான வறட்சி காலங்களில் கூட தண்ணீர் வற்றுவது கிடையாது.

பட்டூர், வெள்ளுத்துப்பட்டி, பால்குடி, கலப் பாறை, அய்வத்தாம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் டூ வீலர் மற்றும் சைக்கிள்களில் வந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். தண்ணீர் பால் போன்ற சுவையுடன் உள்ளதால் குடிப்பதற்கும் சமையலுக்கும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தண்ணீர் பிடித்தாலும் வற்றாமல் வந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தண்ணீர் பிடித்தது போக மற்ற நேரங்களில் ஊறும் தண்ணீரை பால்குடி பொதுமக்கள் கண்மாயில் தேக்கி வைக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளின் தாகமும் தீர்க்கப்படுகிறது.

மிச்சப்படும் தண்ணீரை கொண்டு பருவத்தில் உள்ள பயிர்களின் விளைச்சலுக்கு தேவைப்படும் கடைசி தண்ணீராகவும் பயன்படுத்துகின்றனர்.

கிராமத்து நாட்டாமை கருப்புச்சாமி கூறுகையில், க்கருப்பசாமி அருளால் எங்களுக்கு இந்த அதிசய நீருற்று கிடைத்திருக்கிறது. இத் தண்ணீரை பருகுவதால் எங்களுக்கு நோய் நொடிகள் வராது. 18 கிராம மக்களின் உறவினர்கள் வீடுகள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு கூட இந்த தண்ணீரை கொடுத்தனுப்புகிறோம். இவ்விடத்துக்கு அருகில் நூற்றுக்கணக்கான அடியில் உள்ள கிணறுகள் கூட தண்ணீரின்றி வறண்டு கிடக்கிற அதே வேளையில் எங்களுக்கு எல்லா காலங்களிலும் தண்ணீர் கிடைக்கும் அதிசய நீருற்று கிடைத்திருக்கிறது என்கிறார்.





அன்புடன் சக்தி

Thursday, November 22, 2012

யார் இந்தஅஜ்மல் கசாப்?


  கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக படகு மூலம் மும்பையில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 60 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.  இதில்  உயிருடன் பிடிபட்டவன்தான் இந்த கசாப்.

அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்

கொடுக்கப்பட்டது.