Friday, February 24, 2012

ஆப்கானிஸ்தானில் புனித நூலான குரான் எரிக்கப்பட்டது

  ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் முக்கிய தளமான பக்ராம் விமான தளத்தில் குப்பை பெருக்கும் ஆப்கானியர்கள் குப்பை பெருக்கும் போது எரிக்கப்பட்ட குரானின் தாள்களை கண்டனர். இச்செய்தி வெளியானவுடன் அமெரிக்க படையினர் சார்பில் விசாரணை நடத்தி குரான் எரிக்கப்பட்டது உண்மை என்றும் அதற்காக மன்னிப்புகேட்டுகொள்வதாகவும் அறிவித்தனர்.


குரான் எரிக்கப்பட்டதாக கூறி 60க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் விமானப்படை தளம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆப்கன் படையினர், அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். இதுமட்டுமல்லாது, இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுடதொர்பாக, அதிபர் பாரக் ஒபாமா, ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், அமெரிக்க வீரர்களின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது <உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனிதநூலான குர்ஆன் எரிக்கப்பட்டது துரதிர்ஷ்டமான சம்பவம் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.



இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.





 





அன்புடன்
சக்தி

No comments: