அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 91 வயதான பெண்மணி ஒருவர், உலகின் மிக வயதான யோகா ஆசிரியர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
பெர்னிஸ் பேட்ஸ் என்ற அப்பெண்மணி கடந்த 50 வருடங்களாக யோகா செய்து வருகிறார். அவருக்கு 70, 80 மற்றும் 90 வயதுகளில் மாணவர்களும் உள்ளனர்.
யோகா தனக்கு பலத்தையும், எதையும் அனுபவிக்கும் தன்மையையும் அளிப்பதாக பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
91 வயதான பேட்ஸ் தற்போதும் எடைகளை தூக்குதல், நீச்சலடித்தல் உட்பட பல உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அன்புடன் சக்தி
No comments:
Post a Comment