Saturday, December 17, 2011

உப்பில் உருவான சாதனை ஓவியம்

சமையல் செய்யும் பொழுதுமட்டுமே உப்பை பயன்படுத்தும் பெண்களுக்கு மத்தியில் உப்பை பயன்படுத்தி வேலூரை சேர்ந்த சதீஷ் என்ற தொழில் அதிபர் மனைவி சரிதா 84 சதுர மீட்டர் பரப்பளவில் 7 வண்ணங்களில் மிகப் பெரிய ஓவியம் தீட்டி சாதனை படைத்துள்ளார் .

உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியம் எலைட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.






வேலூரை சேர்ந்த இவர் படிக்கும் போதே ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றவர்.



7 மீற்றர் அகலமும், 12 மீற்றர் உயரமும் கொண்ட 84 சதுர மீற்றர் பரப்பளவில் 9 மணி நேரத்தில் மிகப் பெரிய ஓவியம் வரைவதற்கு கோவையில் உள்ள எலைட் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார்.



3 மணி நேரத்துக்கு 15 நிமிடம் ஓய்வு என்ற நிபந்தனையுடன் இரு முறை மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் 8 மணி 15 நிமிடங்களில் தனது சாதனையை நிறைவு செய்தார்.

இது குறித்து "எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் குமார் கூறுகையில்,""எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரத்து, 800 சாதனையாளர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 96 நாடுகளில், 11 உலக சாதனைகள் செய்யப்பட்டுள்ளது,'' என, கூறினார்.


பின்னர், "எலைட்' உலக சாதனை செய்த சரிதாவுக்கு சான்றிதழை, "எலைட்' நிறுவன நிறுவனர் பிரதீப் குமார் வழங்கினார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சீனியர் உதவி விரிவுரையாளர் டாக்டர் கோமதி. சமையல் கலை வல்லுனர் மல்லிகா பத்திரி நாத், கலெக்டர் நாகராஜன் மனைவி லாவண்யா, சி.எம்.சி., தலைமை மருத்துவர் டாக்டர் நிகால் தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.