திருப்பதி நகரம் ஓட்டேரைச் சேர்ந்தவர் மஸ்தான் பாஷா (வயது40) கார் டிரைவராக உள்ளார். இவர் கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்களை காரில் ஏற்றிச் செல்லும் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
நேற்று மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களை தனது காரில் திருமலைக்கு அழைத்து சென்றார்.
இரண்டு வளைவுகளை தாண்டினால் கோவிலை சென்றடைய முடியும் என்ற நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தபடியே காரை ஓட்டினார்.
செய்கையால் நெஞ்சு வலிப்பதை காரில் வந்த பக்தர்களிடம் தெரிவித்த அவர் காரின் வேகத்தை குறைத்து மெதுவாக ஒரு தடுப்பு சுவரில் மோதி நிறுத்தினார். காரில் இருந்த பக்தர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சு வருவதற்குள் மஸ்தான் பாஷா பரிதாபமாக இறந்தார்.
உயிர் பிரியும் தருவாயிலும் ஏழுமலையான் பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மஸ்தான்பாஷா செயல்பட்டது காரில் வந்தவர்களை கண்ணீர் மல்க வைத்தது
அன்புடன்
சக்தி