Monday, March 26, 2012

துப்பாக்கி சண்டையில் மரணம் அடைந்த வீரரை, அவரது கர்ப்பிணி காதலி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளது பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்சில் கடந்த வாரம் முகமது மீரா(வயது 23) என்ற தீவிரவாதி பள்ளிக்கூடத்திலும், அதற்கு அருகில் உள்ள இடங்களிலும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.







இதில் துணை இராணுவ வீரர் அபெல் சென்னூப், 3 பள்ளி குழந்தைகள், ஆசிரியை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் பின்னர் அவரது வீட்டில் பதுங்கியிருந்த முகமதுவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.



இந்நிலையில் வக்கீல் கில்பர்ட் கொலார்ட் என்பவர் கூறியதாவது: துப்பாக்கிச் சூட்டில் இறந்த வீரர் அபெல் சென்னூப்பின் 21 வயது காதலி கரோலின் மோனெட். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இறந்த தனது காதலனை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.







இறந்த ஒருவருடன் திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இல்லாதது. ஆனால் சில அசாதாரண சூழ்நிலையில் இது போன்ற திருமணத்துக்கு அனுமதி அளிப்பது ஜனாதிபதியின் முடிவை பொறுத்தது.



இதற்கு முன் இறந்த காவல்துறையினர் இரண்டு பேரின் காதலிகளுக்கு இது போல் திருமணம் நடந்துள்ளது. இதுபோன்ற திருமணத்தின் போது மணமகள் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை அமைக்கப்படும்.



அதில் மணமகன் இருப்பது போல் நினைத்து திருமண சடங்குகள் நடக்கும். இதன் மூலம் பிறக்க போகும் குழந்தைக்கு சட்டப்பூர்வமான தந்தையாக சென்னூப் கருதப்படுவார்.


















அன்புடன் சக்தி

No comments: