Friday, March 30, 2012

தொண்டை வலியில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள்



தொண்டையில் பிரச்னை தொடங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம்.


சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்று தான் தொண்டையில் தொடங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.



தொண்டையில் புண் இருக்கும் போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும்.




ஆனால் யாரும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும் போது வைரஸ் தொற்றும், சுகாதார மற்ற உணவுகளை உட்கொள்ளும் போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது.



இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. ஸ்டிரெப்போகாக்கஸ் கிருமி நோய் பரவலுக்கு காரணமாகிறது. தொற்று பரவும் போது டான்சிப்ஸ் வீங்கும், இதனால் எச்சில் விழுங்கும் போது வலி ஏற்படும்.



தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். சளி, எச்சில் மற்றும் கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.



தொடக்கத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் போது நோய் கடுமையாகி மூச்சுக் குழலில் தொற்று உண்டாகி வீக்கத்தால் காற்றுப் பாதை அடைபடலாம். இதனால் மூச்சு விடுவது மற்றும் விழுங்குவது இரண்டுமே சிரமமாகும்.



கடும் தலைவலி மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தொண்டைப் புண்ணுக்கு மருந்துகள் தரப்பட்டால் அவற்றை முழுமையாக உட்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துவதால் சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது.



இவற்றை கண்டு கொள்ளாமல் விடும் போது ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உண்டாக்கும். எனவே தொண்டை வலி ஏற்பட்டவுடன் காது மூக்கு தொண்டை நிபுணரை அணுகி ஆண்டிபயாடிக் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.



பாதுகாப்பு முறை: தொண்டையில் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள்(தண்ணீர், சூப்) எடுத்துக் கொள்ளலாம்.



இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும், கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும் இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.



சப்பிச் சாப்பிடும் மாத்திரை மற்றும் இனிப்பில்லாத சூயிங்கம் ஆகியவற்றை சுவைப்பதால் அதிக உயிழ்நீர் சுரந்து தொண்டையை சுத்தம் செய்யும். இந்த மாதிரியாக நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் அவசியம்.



அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். புகை பிடித்தலை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம், கைகளால் முகத்தை துடைப்பதை தவிர்க்கலாம்.



குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் தொடர்ந்து மூன்று முறைக்கும் மேல் டான்சில் நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டியது அவசியம்.



இல்லாவிட்டால் அதில் இருந்து கிருமிகள் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. டான்சில் அறுவை சிகிச்சை செய்வதால் குரல் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த பாதிப்பும் இருக்காது.



சுகாதாரமான உணவு, குளிர் பானம், தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் தொண்டை வலியில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

அன்புடன் சக்தி

Monday, March 26, 2012

துப்பாக்கி சண்டையில் மரணம் அடைந்த வீரரை, அவரது கர்ப்பிணி காதலி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளது பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்சில் கடந்த வாரம் முகமது மீரா(வயது 23) என்ற தீவிரவாதி பள்ளிக்கூடத்திலும், அதற்கு அருகில் உள்ள இடங்களிலும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.







இதில் துணை இராணுவ வீரர் அபெல் சென்னூப், 3 பள்ளி குழந்தைகள், ஆசிரியை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் பின்னர் அவரது வீட்டில் பதுங்கியிருந்த முகமதுவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.



இந்நிலையில் வக்கீல் கில்பர்ட் கொலார்ட் என்பவர் கூறியதாவது: துப்பாக்கிச் சூட்டில் இறந்த வீரர் அபெல் சென்னூப்பின் 21 வயது காதலி கரோலின் மோனெட். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இறந்த தனது காதலனை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.







இறந்த ஒருவருடன் திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இல்லாதது. ஆனால் சில அசாதாரண சூழ்நிலையில் இது போன்ற திருமணத்துக்கு அனுமதி அளிப்பது ஜனாதிபதியின் முடிவை பொறுத்தது.



இதற்கு முன் இறந்த காவல்துறையினர் இரண்டு பேரின் காதலிகளுக்கு இது போல் திருமணம் நடந்துள்ளது. இதுபோன்ற திருமணத்தின் போது மணமகள் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை அமைக்கப்படும்.



அதில் மணமகன் இருப்பது போல் நினைத்து திருமண சடங்குகள் நடக்கும். இதன் மூலம் பிறக்க போகும் குழந்தைக்கு சட்டப்பூர்வமான தந்தையாக சென்னூப் கருதப்படுவார்.


















அன்புடன் சக்தி

Saturday, March 17, 2012

பாகிஸ்தானில் இந்து பெண்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவது உண்மை தான்-ஸர்தாரியின் சகோதரி


பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து பெண்களை கடத்தி சென்று கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.


பாகிஸ்தானில் இந்து பெண்களை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக மதம்மாற்றி திருமணம் செய்துகொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில தினங்களில் 3 இந்துப் பெண்கள் கடத்தப்பட்டதாகவும், இதனால் இந்துக்கள் பாதுகாப்பின்றி உள்ளதாக உணர்வதாகவும் பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் குமார், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இதுகுறித்த வழக்கு ஒன்றில் கடத்தப்பட்ட 3 இந்து பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இந்த பெண்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவது உண்மை தான் என ஜனாதிபதி ஸர்தாரியின் சகோதரி கூறியுள்ளார்.





பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஸர்தாரியின் சகோதரியுமான அஸ்ரா பாசல் பேசுகையில், சிந்து மாகாணத்தில் உள்ள சில இந்து பெண்களை கடத்தி சென்று மதரசாக்களில்(முஸ்லிம்கள் குர்ஆன் ஓத கற்றுக் கொள்ளும் இடம்) அடைத்து வைத்த சம்பவம் உண்மை தான்.
Azra Fazal Pechuho


அவர்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிந்து மாகாணத்தில் இந்து பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.



பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு தேவையான சட்டத்தை கொண்டு வரவேண்டும். கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டும் என்றார்.



இவரது கருத்தை ஆதரித்து மற்றொரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நபீசா ஷாவும் நாடாளுமன்றத்தில் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


அன்புடன் சக்தி

Friday, March 09, 2012

சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய புகைப்படங்கள்

இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அல்லது சரணடையும் போது பிடித்துச்செல்லப்பட்ட பல நூறு பெண் போராளிகளையும்,சாதாரண பெண்களையும் கொடிய சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ள புகைப்படங்கள் கடந்த பல மாதங்களாக வெளிவந்துள்ள நிலையில் சமிபத்தில் அவ்வாறான புகைப்படங்கள் அடங்கிய ஆதாரம் வெளியிடப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக அவ்வாறானதொரு போர் குற்ற ஆதாரம் வெளியிடப்படுகிறது.



சிங்களம் தருவதை வாங்கிக்கொண்டு வாழலாம் என்று அரசியல் பேசும் சில தமிழ் அரசியல்வாதிகளும்,புத்திஜீவிகள் என்றுசொல்லித்திரியும் மனிதர்களும் இதைப்பார்த்தாவது தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி தனி தமிழ் ஈழமே ஆகும்.
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய புகைப்படங்கள்


அன்புடன் சக்தி