தூத்துக்குடி : இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, நோய் பரப்பும் தன்மை கொண்ட, துர்நாற்றம் வீசும், 260 டன் கழிவுகள், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்' இருப்பதாக, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் கம்பெனி, அதை எடுத்து செல்லவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நகராட்சி கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கன்டெய்னர்களை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். கன்டெய்னர்களுக்குள், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், வேஸ்ட் பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ரப்பர் கையுறைகள், புழுவுடன் கூடிய நகராட்சி கழிவுகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றின் மொத்த எடை, 260 டன். இந்தியாவில் இறக்குமதி செய்ய, தடைவிதிக்கப்பட்டுள்ள இக்கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குப்பை தொட்டியாகும் தமிழ்நாடு |
இந்த செய்தியை பல்வேறு ஊடகங்கள் சாதரணமான ஒரு செய்தியாகவே
வெளிஇட்டன. .ஆனால் இக்கழிவுகள் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
துர்நாற்றம் வீசக்கூடிய இந்த நகராட்சி கழிவுகள், சட்டவிரோதமாக இங்கு தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டால். இது நமக்குநாமே அழிவை தேடிக் கொள்வதாகும் .
மேல்நாடுகளிலிருந்து நோய்களை பரப்பும், கதிர்வீச்சை உண்டாக்கும், அபாயகரமான நகராட்சி மற்றும் மருத்துவ கழிவுகள், மாற்று பெயரில் தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வழியாக, இறக்குமதி செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. அங்கு, "ஓசி'யில் கிடைக்கும் இவற்றை, இங்கு இறக்குமதி செய்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் சில தனியார் நிறுவனங்கள், தூத்துக்குடியை குப்பை தொட்டியாக்கி வருவது வேதனைக்குரியது. இதை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், இக்கழிவுகள் தமிழகத்தின் எந்த பகுதியிலாவது கொட்டப்பட்டு, அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment