Monday, June 27, 2011

காரத்தே கற்றுக் கொள்ளுங்கள்- படத்துடன் விளக்கம்

காரத்தே  கற்றுக் கொள்ளுமுன் முதலில் வணக்கம் செய்யுங்கள்                   
பிறகு ஆவேசமாக கத்துங்கள்.[எதிரி பயப்படுவான்]
                                                                                                                     
                                                                                              
தொடயை தட்டுங்கள்                                                                           

தோள்பட்டையில் கையை மடக்கி மார்பை விரியுங்கள்.
                                                                                                                     

பிறகு எதிரியை முறைத்துப் பார்க்கவும்

                                                                                                                   


அதன்பின்  சிரித்துக் கொண்டே குத்துவதற்கு தயாராகுங்கள்.
  
                                        குத்துங்கள்
                                           கையை மாற்றி மாற்றிக் குத்துங்கள்


                                                குத்துங்கள்  குத்துங்கள்




              சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

  இதுக்கு மேல என்னால முடியலடா சாமி

யூதர் பற்றி தெரிந்த மேலும் தெரியாத தகவல்களைக் காண


கலையகம்: யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறுhttp://kalaiy.blogspot.com/2008/11/blog-post_28.html

Friday, June 24, 2011

குப்பை தொட்டியாகும் தமிழ்நாடு


தூத்துக்குடி : இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, நோய் பரப்பும் தன்மை கொண்ட, துர்நாற்றம் வீசும், 260 டன் கழிவுகள், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்' இருப்பதாக, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் கம்பெனி, அதை எடுத்து செல்லவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நகராட்சி கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கன்டெய்னர்களை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். கன்டெய்னர்களுக்குள், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், வேஸ்ட் பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ரப்பர் கையுறைகள், புழுவுடன் கூடிய நகராட்சி கழிவுகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றின் மொத்த எடை, 260 டன். இந்தியாவில் இறக்குமதி செய்ய, தடைவிதிக்கப்பட்டுள்ள இக்கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குப்பை தொட்டியாகும் தமிழ்நாடு


இந்த செய்தியை பல்வேறு ஊடகங்கள் சாதரணமான ஒரு  செய்தியாகவே
வெளிஇட்டன.   .ஆனால் இக்கழிவுகள்  சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
 துர்நாற்றம் வீசக்கூடிய இந்த நகராட்சி கழிவுகள், சட்டவிரோதமாக இங்கு தொடர்ந்து  இறக்குமதி செய்யப்பட்டால். இது நமக்குநாமே அழிவை தேடிக் கொள்வதாகும் .
மேல்நாடுகளிலிருந்து நோய்களை பரப்பும், கதிர்வீச்சை உண்டாக்கும், அபாயகரமான நகராட்சி மற்றும் மருத்துவ கழிவுகள், மாற்று பெயரில் தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வழியாக, இறக்குமதி செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. அங்கு, "ஓசி'யில் கிடைக்கும் இவற்றை, இங்கு இறக்குமதி செய்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் சில தனியார் நிறுவனங்கள், தூத்துக்குடியை குப்பை தொட்டியாக்கி வருவது வேதனைக்குரியது. இதை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், இக்கழிவுகள் தமிழகத்தின் எந்த பகுதியிலாவது கொட்டப்பட்டு, அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டிருக்கும்.

Wednesday, June 22, 2011

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்
இலங்கையில் தனி ஈழம் நாட்டை உருவாக்க போராடி வந்த விடுதலைப்புலிகள் இயக்கம் கருணா மற்றும் பத்மநாபன் போன்றவர்கள் செய்த துரோகத்தால் வலு இழந்தது.
 
இந்த நிலையில் சில வெளிநாடுகள் துணையுடன் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மீது உச்சக்கட்ட தாக்குதல்களை சிங்கள ராணுவம் நடத்தியது.  
 
2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நந்திக்கடல் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கம் மறுத்தது. பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், மீண்டும் அவர் ஈழப்போரை நடத்த வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.  
 
இறுதிக்கட்ட ஈழப்போரின் போது சுமார் 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்டவர்களில் ஏராளமானவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. பிரபாகரனின் மனைவி மதிவதனியும் என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்தது.
 
பிரபாகரன்-மதிவதனி தம்பதியருக்கு சார்லஸ், பாலசந்திரன் என்ற 2 மகன்களும், துவாரகா என்ற மகளும் பிறந்தனர். இவர்களில் சார்லஸ், பாலசந்திரன் இருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.   என்றாலும் மதிவதனி, துவாரகா, பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக முன்பு பல தடவை கூறப்பட்டது.
 
இறுதிக்கட்ட போர் நடந்தபோது அவர்கள் இலங்கையில் இருந்து பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், வெளிநாடு ஒன்றில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
 
இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி. ஒருவர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.
 
அந்த எம்.பி.யின் பெயர் ஏ.எச்.எம். அஸ்வர். இவர் இலங்கை ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆவார்.   அஸ்கரிடம் மற்ற எம்.பி.க்கள் இது தொடர்பாக மேலும் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர், பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பது எனக்கு உறுதியாக தெரியும் என்றார். ஆனால் பிரபாகரன் மனைவி, மகள், மகன் எந்த நாட்டில் உள்ளனர்? இந்த தகவல் எப்படி கிடைத்தது? என்பன போன்றவற்றுக்கு அஸ்கர் பதில் சொல்லவில்லை.
 இன்னும் சிலநாள் கழித்து
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.என்னும் செய்தியும் வெளியாகும்
மீண்டும் அவர் அறவழியில் ஈழப்போரை நடத்த வருவார்.

Tuesday, June 21, 2011

புகைப்படத்துடன் வெளியீடு-குழந்தையை விழுங்கிய முதலை


குழந்தையை விழுங்கிய முதலையை மக்கள் அனைவரும் சோ்ந்து பிடித்து அந்த முதலையை கொன்று அந்த குழந்தையின் உடலை மீட்ட காட்சி.
 
நன்றி- KING TAMIL

Sunday, June 19, 2011

கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான்

ஸ்ரீரங்கம் கோயிலில் முதல்வர் ஜெ., வுக்கு பூரண கும்ப மரியாதை

ஸ்ரீரங்கம் கோயிலில் முதல்வர் ஜெ., வுக்கு
கோயில் சார்பில் சிறப்பான பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் பங்குனி மாதம் ரெங்கநாதரின் கல்யாண உற்சவ படம் வழங்கினர்