Friday, November 04, 2011

தமிழர்கள் பார்க்கவேண்டிய படம்

போதி தருமன்- சூர்யா நடிக்கும் “ஏழாம் அறிவு” படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன் தான். போதி தருமன் போன்று வாழ்ந்த  பல தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதன்மூலம்   தமிழர்களின் நாகரிகம் மட்டும்மின்றி அறிவியல் திறனையும் அறிந்துகொள்ளமுடியும்.

இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அன்று உலகிற்கு அறிவியலைச் சொல்லிக்கொடுத்தோம்.இன்று .....?நம் தேசத்தின் அறிவியல் என்பது வாழ்வு சார்ந்தது. அதை நாம் காரணமே இல்லாமல் புறக்கணித்து இன்று வெளிநாடுகளில் கையேந்துகிறோம்.



  'தமிழர் பண்பாடு சிறந்தது. அதன் சரித்திரம் மிக பன்மையானது. அதை மறந்துகொண்டிருக்கும் தலைமுறை அதை மீண்டும் போற்ற வேண்டும். அதன் பெருமையை காக்க வேண்டும்.' - இந்த மிக முக்கியமான கருத்தை உணர்த்தும் படம் ஏழாம் அறிவு.





கிபி 5 ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் தான் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். அதன் பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.


கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.






புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் போதி தர்மன். பின்னர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர் தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது. விடியோவை பர்ர்க்க இங்கு சொடுக்கவும்





அன்புடன் சக்தி